ஜெனிவா தீர்மானத்தில் வாக்களிப்பதை இந்தியா தவிர்த்தது ஏன்? பி.கே.பாலச்சந்திரன்

0shares

பல்வேறு காரணங்களுக்காக இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் (யு.என்.எச்.ஆர்.சி) தீர்மானத்தில் வாக்களிப்பதிலி ருந்து இந்தியா செவ்வாய்க்கிழமை தவிர்த்துக்கொண்டது.

ஏப்ரல் 6 ம் திகதி தமிழ்நாடு சட்டசபைக்கு இடம்பெறவுள்ள தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி 234 இடங்களில் 20 இடங்களில் பாரதீய ஜனதா கட்சி ஆளும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழ கத்துடன் (அதிமுக) உடன் இணைந்து போட்டியிடுகின்றமை உடனடி காரணமாக கூடும் .

இலங்கையில்சிறுபான்மைதமிழருக்கு எதிரான மனித உரிமை மீறல்குற்றச் சாட்டுகள் தமிழகத்தில் ஒரு முக்கிய தேர்தல் பிரச்சினையாகும்., இது பாஜகவால் புறக்கணிக்க முடியாத உண்மை.

யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்தின் கருப்பொருளும் இலங்கையில் தமிழர்கள் மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டாகும்.

இலங்கை தொடர்பாக மேற்குகுலகு தலைமையிலான முக்கியகுழு முன்வைத்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்திருந்தால், பாஜகவும் அதன் நட்பு கட்சியான ன அதிமுகவும் தேர்தலில் விலையை செலுத்த வேண்டியிருந்திருக்கும். இருப்பினும், புது டி ல்லி தீர்மானத்திற்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிப்பதை விட நடுநிலை வகிப்பதைத் தேர்ந்தெடுத்தது.

இது இலங்கையையும் அந்நியப்படுத்த முடியாததாலாகும் . பொருளாதாரத் துறையில் தீவு தேசத்தில் சீனா எப்போதும் தடத்தை அகலித்துவரும் சூழலில் இந்தியாவுக்கு இலங்கைஅதிகளவுக்கு புவிசார் அரசியல் முக்கியத்துவம்வாய்ந்ததாக வு ள்ளது. பொருளாதார துறையில் ஆதிக்கத்தால் அரசியல் மற்றும் புவி-மூலோபாய உள்ளடக்கத்தைகூடுதலாக எளிதில் பெறக்கூடும்.

47 உறுப்பினர்களில் 22 பேர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர், 11 பேர் எதிராக வாக்களித்தனர், இலங்கை தொடர்பான தீர்மானதிற்கு14 பேர் வாக்களிப் தை தவிர்த்திருந்த நிலையில், இந்தியா, ஜப்பான், இந்தோனேசியா, லிபியா, பஹ்ரைன்,க மரூன் மற்றும் நேபாளம் ஆகியவை அந்த நாடுகளில் அடங்கும். இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்த நாடுகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சோமாலியா, உஸ்பெகிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகியவை அடங்குகின்றன

தீர்மானம்

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலில் முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையில் மனித உரிமைகளின் நிலைமை குறித்த அதன் கண்காணிப்பு மற்றும் அறிக்கையை மேம்படுத்தவும், . அதன் நாற்பத்தெட்டாவது அமர்வில் மனித உரிமைகள் பேரவையில் வாய்மூல இற்றைப்படுத்தலை முன்வைக்கவும் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தை (OHCHR) தீர்மானம் கோரியுள்ளது.. அதன் நாற்பத்தொன்பதாவது அமர்வில் எழுத்து மூல மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்துவதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கையை முன்வைக்கவும் , அதன் ஐம்பத்தி ஓராவது அமர்வில், வாய்மூல ,ம ற்றும் எழுத்துமூல உரையாடலின் பின்னணியில் விவாதிக்கப்பட வேண்டும்.

இந்தத் தீர்மானம்உயர் ஸ்தானிகர் மற்றும் தொடர்புடையவிசேட நடைமுறைஆணைகொண்டவர்களை இலங்கை அரசாங்கத்தின் ஆலோசனையுடனும், , மேற்கூறிய நடவடிக்கைகளைச் செயல்படுத்த ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் வழங்க ஊக்குவிக்கிறது.

இந்தியாவின் கருத்து

“இலங்கையில் மனித உரிமைகள் குறித்தபிரச்சினைக்கு இந்தியாவின் அணுகுமுறை இரண்டு அடிப்படை விடயங்களினால் வழிநடத்தப்படுகிறது.இலங்கைத் தமிழர்களுக்குசமத்துவம், நீதி கவுரவம் மற்றும் சமாதானம் தொடர்பாக நாங்கள் அளிக்கும் ஆதரவுஒன்றாகும்.. மற்றொன்று இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் உள்ளது. இந்த இரண்டு குறிக்கோள்களும் பரஸ்பரம் ஆதரவளிப்பதாக நாங்கள் எப்போதும் நம்புகிறோம், இரு நோக்கங்களையும் ஒரே நேரத்தில் நிவர்த்தி செய்வதன் மூலம் இலங்கையின் முன்னேற்றம் சிறந்ததாக இருக்கும். ”

“இலங்கை யின் அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தின் படிமாகாண சபைகளுக்கான தேர்தல்களை முன்கூட்டியே நடத்துவதன் மூலமும், அனைத்து மாகாண சபைகளும் திறம்பட செயல்பட முடியும் என்பதை உறுதிசெய்வது உட்பட, அரசியல் அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்ற இலங்கை அரசாங்கத்திற்கான சர்வதேச சமூகத்தின் அழைப்பை இந்தியா ஆதரிக்கிறது. . ”

“அதே நேரத்தில், ஐ.நா. பொதுச் சபையுடன் தொடர்புடைய தீர்மானங்களால் வழங்கப்பட்ட ஆணைக்கு இணங்க உயரிஸ்தானிகராலயத்தின் பணி இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.”

“இலங்கை அரசாங்கம் நல்லிணக்க செயல்முறையை முன்னெடுத்துச் செல்லவும், தமிழ் சமூகத்தின் அபிலாஷைகளை தீர் த்துவைக்கவும் , அதன் அனைத்து குடிமக்களின் அடிப்படை சுதந்திரங்களும் மனித உரிமைகளும் முழுமையாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக வும் சர்வதேச சமூகத்துடன் தொடர்ந்து ஆக்கபூர்வமாக ஈடுபட வேண்டும் என்றும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.என்று இந்திய பிரதிநிதி கூறியி ருந்தார்.

இலங்கையின் அபிப்பிராயம்

இந்த தீர்மானம் “தேவையற்றது, நியாயப்படுத்தப்படாதது மற்றும் ஐ.நா. சாசனத்தின் தொடர்புடைய சரத்துகளை குறிப்பாகமனிதஉரிமைகள் பேரவைக்குஅதிகாரத்தைவழங்கும் சரத்து 2 துணை பிரிவு 07 மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானங்கள் 60/251 ஆகியவற்றின் தொடர்புடைய பிரிவுகளை மீறுவதாகும்” என்று இலங்கை யின் பிரதிநிதி சி.ஏ.சிந்திரப்பெரும கூறியிருந்தார்.

ஐ.நா. பொதுச் சபையால் 60/251 தீர்மானத்திலோ அல்லது அடுத்தடுத்த தீர்மானங்களிலோ யு.என்.எச்.ஆர்.சி தனக்கு ஒதுக்கப்படாத பணிகளை ஏற்க முடியாது என்பதை சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த தீர்மானம் அனைத்து அரசுகளின் இறையாண்மை சமத்துவம் மற்றும் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளை மீறியுள்ளது என்று இலங்கை த் தூதுவர் தெரிவித்திருக்கிறார். இந்த தீர்மானம் இலங்கையின் ஒப்புதலின்றி சம்பந்தப்பட்ட நாடா முன்வைக்கப்பட்டது, எனவே அது பயனற்றது மற்றும் பிளவுபடுத்துகிறது. என்றும் கூறப்பட்டுள்ளது.

“சம்பந்தப்பட்ட நாட்டை விட எந்தவொரு நாடும் தனது மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டிருக்கவில்லை, இந்த சபையின் நடவடிக்கைகளின் போது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்ட ஒருவிடயம் இது இது” என்று சந்திரபெரும கூறியி ருக்கிறார்.

“தீர்மானத்தின் ஆதரவாளர்களிடம் கூறப்பட்ட குறிக்கோள்கள் இருந்தபோதிலும், இந்தத் தீர்மானம் இலங்கை சமுதாயத்தை துருவமய ப்படுத்துவதோடு பொருளாதார வளர்ச்சி, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மோசமாக பாதிக்கும் என்று இலங்கையின் கருத்து உள்ளது,” என்று அவர் மேலும் கூறியி ருக்கிறார்.

இந்திய - இலங்கை உறவுகள் தொடர்பான வீழ்ச்சி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு இந்தியாவின் இக்கட்டான நிலையை தொலைபேசியில் விளக்கி, இலங்கைக்கு இந்தியா எந்தத் தீங்கும் செய்யாது என்று அவருக்கு உறுதியளித்திருந்தாலும், இலங்கையின் பெரும்பான்மை சமூகமான சிங்களவர்கள் இந்தியா வாக்களிப்பை தவிர்த்ததை சாதாரணமானதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.

இந்தியா-இலங்கை-உறவுகள், தற்போதைய தருணத்தில் சிறப்பாக , இல்லையெனவும் மேலும் வலுவிழக்குமெனவும் என்றுஅவதானிகள் நம்புகின்றனர்.

கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கொள்கலன் முனையத்தை நிர்மாணிக்கும் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவதற்கான 2019 ஒப்பந்தத்தை இலங்கை ரத்துசெய்த தை ய டுத்து உறவுகள் தாழ்ந்த மட்டத்தை தொட்டன. கொழும்பின் வார்த்தை மீதான நம்பிக்கையை இழந்து, இந்திய அரசு இலங்கைமாற்றீடாகவழங்க முன்வந்திருந்த மேற்கு கொள்கலன் முனையத்தைஎடுத்துக்கொள்ளும் மாற்று வாய்ப்பை எடுத்துக்கொண்டிருக்கவில்லை. இந்த விடயத்தை ஒரு தனியார் இந்திய நிறுவனமான அதானியி டம் விட்டுவிட்டது.13 ஆவதுதிருத்தத்தின் தலைவிதி பற்றியும் இந்தியா அச்சத்தில் உள்ளது.

இலங்கை அரசியலமைப்பின் திருத்தம் (13 ஏ) மாகாணங்களுக்கு (குறிப்பாக தமிழ் பேசும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு) ஒரு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சியை அளிக்கிறது. 1987 ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தில் இருந்துவந்ததேஇத்திருத்தமாகும். , இது தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு மூலம் தீர்வு காண்பது என்று அர்த்தப்படும்

கடந்த சில மாதங்களாக , முன்னாள் மாகாண சபைகள் அமைச்சர் அட்மிரல் .சரத் வீரசேகர உட்பட, இலங்கை அமைச்சர்கள் மாகாண சபைகள் பிரயோ சன மற்றவை , பிளவுபட்டவை என்ற அடிப்படையில் 13 ஆவது திருத்தத்தை ரத்து செய்வது குறித்து பேசி வந்தனர். இந்தியான் கவலை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து, இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச , வீரசேகரபி வை இலாகாவில் இருந்து விடுவித்தார்,

பின்னர் சட்டரீதியான தடைகளைத் தீர்த்து ஜூன் மாதத்தில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார். ஆனால் இந்தியா தொடர்ந்து அச்சமடைந்து வருகிறது, யு.என்.எச்.ஆர்.சி.யில் இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே 13ஆவது திருத்தத்தின் தலைவிதியை அவரது உரையில் கனதியாக கொண்டிருந்தார்.

இலங்கையின் முக்கியத்துவம்.

எவ்வாறாயினும், புதுடி ல்லி பல காரணங்களுக்காக கொழும்புடன் இணைந்திருந்தாலும், ஒரு அரசியல் மற்றும் புவிசார் அரசியல் பரிமாணத்தைப் பெறக்கூடிய இலங்கையில் சீனாவின் வளர்ந்து வரும் பொருளாதார தடம் இருப்பதைக் கருத்தில் கொண்டு அதனுடன்சிறுசச்சரவுகளை உருவாக்க முடியாது. உலகமயமாக்கல் யுகத்தில் புவிசார் அரசியலின் அடிப்படை யாக புவிசார் பொருளாதாரம் உள்ளது..

பாதுகாப்பு அச்சுறுத்தலைக் காரணம் காட்டி, வடக்கு மாகாணத்தில் சில மின் திட்டங்களை ஒரு சீன நிறுவனத்திற்கு வழங்க கொழும்பின் முயற்சியை புதுடில்லி வெற்றிகரமாக முறியடித்தது. கொழும்பில் ஒரு செயலகத்தை நிறுவுவதன் மூலம் பொறிமுறையின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்புடன் இந்தியா இலங்கையை அதன் இந்தியப் பெருங்கடல் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாற்றியது.

இலங்கை விமானப்படையின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் சமீபத்தில் தனது இராணுவத் திறனைக் காண்பிக்கும் ஒரு மெலிதானவொரு முயற்சியில், பங்கேற்றது.விமானப்படையின் ஆண்டுவிழா கொண்டாட்டங்களில் இந்தியாவின் தேஜாஸ் போர் விமானங்களையும் ஏரோபாட்டிக் அணிகளையும் அனுப்பி, தனது இராணுவத் திறனைக் காண்பிக்கும் ஒரு மெல்லிய முயற்சியில், இந்தியா பங்கேற்றது.

வெளியுறவு அமைச்சர்கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தானே கொழும்புக்குவருகை தந்து கோவிட் -19 தடுப்பூசிகளை முதன்முதலில்ஜனாதிபதிகோத்தாபாய ராஜபக்ச விடம் வழங்க முன்வந்திருந்தார்.. கோவிஷீல்ட் தடுப்பூசிகளின் இரண்டாவது சதொகுதி விநியோக தடைகள் காரணமாக தாமதமாகிவிடும் என்றாலும், இன்றுவரை, இலங்கையில் ஒரே ஒரு தடுப்பூசிவிநியோகஸ்தராக இந்தியா மட்டுமேஉள்ளது.. இந்தியா இலங்கையில் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டங்களைத் தொடர்கிறது மற்றும்வர்த்தக நிறுவனங்களுக்கு உதவ 15 மில்லியன் அமெரிக்க டொ லர் திட்டத்தை கொண்டுள்ளது.

எவ்வாறாயினும், ஏப்ரல் 6இல் மாநில சட்டமன்றத் தேர்தல் வரையில் தமிழ்நாட்டின் தமிழர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கான குறுகிய கால மற்றும் உடனடி ஆர்வத்துடன் இலங்கையுடன் நல்லுறவைப் பேணுவதற்கான தனது நீண்டகால ஆர்வத்தை இந்தியாஎவ்வாறு சரிசெய்யும் என்பதைப்பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.. பிபிசுப்பான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழியாக ஐ. நா. மனிதஉரிமைகள்பேரவையில் இந்தியாவின் நடுநிலைமையை பார்வையாளர்கள் பார்க்கிறார்கள்.

நன்றி - நியூஸின் ஏசியா

- Thinakural
இதையும் தவறாமல் படிங்க
இப்படியொரு அரசியல் இலாபம் தேடாதீர் - அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

இப்படியொரு அரசியல் இலாபம் தேடாதீர் - அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா