சீனாவில் கொரோனாவால் பலியானவர்கள் இத்தனை ஆயிரம் பேரா? வெளியாகியுள்ள காணொலியால் பரபரப்பு

1771shares

சீனா ஒரு மூடிய தேசமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அங்கு நிகழ்பவை வெளி உலகிற்கு தெரிவதில்லை. தன் நாட்டு இரகசியங்களை வெளியே கசிவதைக் கூட சீன அரசாங்கம் விரும்புவதில்லை.

இதேபோன்று தான் சீனாவை ஆட்டிவிக்கும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையையும் சீன அரசாங்கம் மூடி மறைப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன்.

வுகான் நகரில் உருவாகிய கொரோனாவின் தாக்கத்தினால் இதுவரை 910பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது உண்மையான எண்ணிக்கையல்ல என்றும், பலியானவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களாக உயிர்ந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது கோடீஸ்வரர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொலி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா வைரஸால் சீனாவில் 50,000 பேர் உயிரிழந்துள்ளார்கள் என அவர் பகிரங்கப்படுத்தியிருக்கிறார். சீனாவை சேர்ந்த பெரும் கோடீஸ்வரரான Guo Wengui கொரோனா இறப்புகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் வசித்து வரும் அவர் கூறுகையில், சீனாவில் கொரோனாவை இறந்தவர்களின் 1200 சடலங்கள் ஒரு நாளைக்கு எரிக்கப்படுகின்றன. அதன்படி பார்த்தால் கொரோனாவால் இதுவரை 50,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதோடு உயிர்கொல்லி கொரோனாவால் 1.5 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், சீனா இதை மறைக்கிறது என கூறி அதிரவைத்துள்ளார். கோடீஸ்வரர் Guo Wengui சர்ச்சைக்கு பெயர் போனவர் ஆவார்.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்ட பின்னர் கடந்த 2015ல் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும், சீனத் தகவல்களின்படி, 910 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 40,000 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


you may like this

Tags : #Covid-19 # #China
இதையும் தவறாமல் படிங்க
பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

பாலியல் லஞ்சம்! இரவு வேளையில் கைது செய்யப்பட்ட கிராம சேவகர்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் பெண்களுக்கு நேர்ந்த அவலம்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்

விமான நிலையம் திறப்பு தொடர்பில் பிரதமர் வெளியிட்ட தகவல்