கடந்த வாரம் படுதோல்வி! இந்த வாரம் பெரு வெற்றி- சீனாவின் இமாலய சாதனை

63shares

சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தில் இருந்து ரொக்கெட் மூலமாக 9 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனாவின் ஜிலின் மாகாணம் சாங்சுன் நகரில் மஞ்சள் கடல் பகுதியில் சீனா தனது 2-வது கடல் ஏவுதளத்தை அமைத்துள்ளது. நேற்று இந்த ஏவுதளத்தில் உள்ள ஒரு கப்பலில் இருந்து ரொக்கெட் ஒன்றை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

இந்த ரொக்கெட்டில் 9 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

லாங் மார்ச் 11 கேரியர் ரொக்கெட், 3 வீடியோ செயற்கைக்கோள்கள், 6 புஷ்புரூம் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. தலா 42 கிலோ எடையுள்ள இந்த செயற்கைக்கோள்கள் வேளாண்மை, வனவியல் நில வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற துறைகளில் தொலைநிலை உணர்திறன் சேவைகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 6 செயற்கைக்கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக சீனா தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சீனா விண்ணுக்கு அனுப்பிய செயற்கைகோள் ஒன்று சுற்றுவட்ட பாதையில் நுழையாமல் தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

நடுவீதியில் வைத்து இளைஞன் மீது வாள்வெட்டு - யாழில் சம்பவம்

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமிழ் கட்சிகள் ஒன்று திரண்டு உணவு ஒறுப்புப் போராட்டம்! நேரலையில்..

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்

மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தம் - கல்வியமைச்சின் விசேட அறிவித்தல்