பல்லி உங்கள் தலையில் விழுந்தால் குடும்பத்தில் மரணம்!! பல்லி ஜோசியம் என்ன கூறுகிறது தெரியுமா?

330shares

பல்லி விழுந்தால் ஏதோ பலன் உண்டு என்பது ஐதீகம்.

நம் உடலில் 65-க்கும் அதிகமான உறுப்புகள் உள்ளன. அவற்றில் எந்தெந்த உறுப்புக்களில் பல்லி விழுந்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்று கூறுவதுதான் பல்லி ஜோஷயம்.

பல்லி சாஸ்திரப்படி, பல்லி நம் உடலில் எங்கே விழுந்தால் என்ன அர்த்தம் என்று கூறப்பட்டிருக்கின்றது தெரியுமா?

 • பல்லி ஒருவரின் தலையில் விழுந்தால்; வரப்போகும் கெட்ட நேரத்திற்கு அவர் தன்னை தானே தேற்றிக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு மற்றவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு, அலைக்கழிக்கப்பட்ட மன நிம்மதி அல்லது குடும்பத்தில் மரணம் ஏற்படலாம்.
 • ஆனால் தலையில் விழுவதற்கு பதிலாக முடியின் மீது விழுந்தால் ஏதோ வகையிலான நன்மை கிட்டும்.
 • ஒருவரின் முகத்தில் பல்லி விழுந்தால்; சீக்கிரமே உங்கள் வீட்டு கதவை உறவினர் தட்டலாம்.
 • உங்கள் புருவத்தின் மீது விழுந்தால்; ராஜ பதவியில் இருப்பவரிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்கும்.
 • உங்கள் கன்னம் அல்லது கண்களில் விழுந்தால்; ஏதோ ஒன்றுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
 • மேல் உதட்டின் மீது விழும் போது செல்வ இழப்பு ஏற்படும்.
 • அதுவே கீழ் உதடு என்றால் சொத்து பெருகும் என அர்த்தமாகும்.
 • உங்கள் மூக்கின் மீது பல்லி விழுந்தால்; நீங்கள் நோய்வாய் படலாம்.
 • வலது காதின் மீது பல்லி விழுந்தால் நீண்ட ஆரோக்கியமான வாழ்வை நீங்கள் வாழ்வீர்கள் என அர்த்தமாகும்.
 • உங்கள் வாயின் மீது விழுந்தால்; ஏதோ ஒன்றை கண்டு நீங்கள் பயப்பட போகிறீர்கள் என அர்த்தமாகும்.
 • கழுத்தின் மீது விழுந்தால் உங்கள் விரோதிகள் அழிக்கப்படுவார்கள்.
 • இடது கையின் மீது பல்லி விழுந்தால்; உங்களுக்கு பாலியல் ரீதியான சந்தோஷங்கள் கிடைக்கும்.
 • இதுவே வலது கை என்றால் உங்கள் உடல்நலம் பெருவாரியாக பாதிக்கப்படும்.
 • வலது மணிக்கட்டு, தொப்புள், தொடை, முட்டி, கணுக்கால், பிட்டம் வலது மணிக்கட்டில் விழுந்தால்; ஏதோ வகையில் பிரச்சனை எழலாம்.
 • பல்லி விழும் இடம் உங்கள் தொப்புள் என்றால் உங்களுக்கு மதிப்புமிக்க கற்களும், ரத்தினங்களும் கிடைக்கும்.
 • பல்லி உங்கள் தொடையில் விழுந்தால் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் வருத்தத்தை ஏற்படுத்துவீர்கள்.
 • முட்டி, கணுக்கால் மற்றும் பிட்டத்தின் மீது விழுந்தால் பொதுவான நன்மை ஏற்படும்.
 • பாதத்தில் பல்லி விழுந்தால் வருங்காலத்தில் பயணம் மேற்கொள்வீர்கள்.
 • பிறப்புறுப்பின் மீது பல்லி விழுந்தால் கஷ்டகாலம் மற்றும் வறுமையை அது குறிக்கும்.

பல்லி கத்துவதையும் கூட இந்த வகையில் கூறலாம். எந்த திசையில் இருந்து உங்களுக்கு சத்தம் கேட்கிறது, அந்த நாளின் நேரம், அந்த வாரத்தின் நாள் போன்ற சில விஷயங்களையும் கருத்தில் கொண்டு பலனை கணிப்பார்கள் பல்லி ஜோசியக்காரர்கள பல்லி விழுவதால் ஏற்படும் தீமைகளுக்கு பரிகாரம் உள்ளது என ஏடுகள் கூறுகிறன .

பல்லிகள் இல்லாத புலம்பெயர் நாடுகளில் வசிப்பவர்கள் இந்த பல்லி ஜோசியத்தை பரிட்சித்துப்பார்க்க விரும்பினால், ஒரு தடவை தாயகம் போய் சுவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லியை வைத்து முயற்சிக்கலாம். ஒரு வேளை அந்தப் பல்லி தவறிப் போய் உங்கள் தலையில் விழுந்து தொலைத்தால் பாவம் கோத்தாவை குற்றம் சொல்லக்கூடாது.

இதையும் தவறாமல் படிங்க