அவுஸ்திரேலிய விடுதியில் சிறை வைக்கப்பட்டுள்ள 80 அகதிகள்

45shares

அவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயற்சித்து, பப்பு நியூ கினியா மற்றும் நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பு முகாம்களில் பல ஆண்டுகளாக வைக்கப்பட்டிருந்த அகதிகள் தற்போது அவுஸ்திரேலிய விடுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இது தடுப்பிற்கான மாற்று இடமாக கருதப்படுகின்றது.

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் உள்ள கங்காரு பாய்ண்ட் சென்ட்ரல் எனும் விடுதியில் 12 மாதங்களாக அகதிகள் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இங்கு குர்து- ஈரானிய அகதியான கசிமீ உள்ளிட்ட 80 அகதிகளும், அவுஸ்திரேலிய அரசால் சமீபத்தில் நீக்கப்பட்ட மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் மூலம் மருத்துவ சிகிச்சைக்காக அவுஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்டவர்கள்.

இந்த சூழலில், அவுஸ்திரேலியா கொண்டு செல்லப்பட்ட பின்னரும் 8 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுள்ளது.

இந்த நிலையில், அவ்விடுதி அகதிகளை வைத்திருப்பதற்கான இடமாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அவுஸ்திரேலிய எல்லைப்படை உறுதி செய்யவில்லை.

அதே சமயம், “ஒப்பந்த ஏற்பாடுகளை, தனிப்பட்டவர்களின் தடுப்பு விவரங்களை, அவர்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் குறித்து எல்லைப்படை விவாதிப்பதில்லை,” என எல்லைப்படையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். குடிவரவுத் தடுப்பு என்பது வழக்கிற்கு வழக்கு மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

யாழ் மாவட்டத்தின் முக்கிய தேர்தல் தொகுதிகளின் முடிவுகள் வெளியாகின! முன்னிலையில் யார்?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

ஸ்ரீலங்கா தேர்தலில் இதுவரையான முடிவுகளின் விபரம்! முன்னிலையில் யார்? தமிழர் தரப்பின் நிலை?

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்

வெற்றிக்கொண்டாட்டத்தில் மஹிந்த! நாமல் வெளியிட்ட புகைப்படம்