ஏரிக்குள் கவிழ்ந்த தொடருந்து: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்!

6shares

கனடாவில் தடம் புரண்ட ரயிலின் பெட்டிகள் ஏரிக்குள் கவிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவின் Pemberton பகுதிக்கு வடக்கே 25 கிலோமீற்றர்கள் தொலைவில் கேட்ஸ் ஏரியில் கூட்ஸ் ரயில் ஒன்றின் சில பெட்டிகள் கவிழ்ந்தன.

அதிர்ஷ்டவசமாக அந்த ரயிலில் மரப் பொருட்கள் மட்டுமே இருந்தன, ஆபத்தை உண்டாக்கும் பொருட்கள் எதுவும் இல்லை.

மூன்று பெட்டிகள் தண்ணீருக்குள் விழுந்த நிலையில் ஏரிக்கு அருகில் வசித்துவரும் Lauren Phare என்ற பெண்ணின் குடும்பத்தார் உதவிக்கு விரைந்தனர்.

அவர்கள் தங்கள் படகின் உதவியால் ரயில் பெட்டிகளை கரைக்கு கொண்டு வர உதவினர்.

Lauren Phare, 10 மாதங்களுக்குமுன் இதே இடத்தில் இன்னொரு ரயில் தடம் புரண்டதை நினைவு கூர்ந்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் மரக்கட்டைகளை ஏற்றி வந்த ஒரு ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

நல்ல வேளையாக ரயில் பெட்டிகளில் ரசாயனப் பொருட்கள் எதுவும் இல்லை என்று கூறிய அவர், அப்படி இருந்திருந்தால் இந்த பகுதிக்கே பெருத்த பாதிப்பு ஏற்பட்டிருந்திருக்கும் என்றார்.

இதையும் தவறாமல் படிங்க
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள் தப்பிச் சென்றது எவ்வாறு? வெளியாகும் திடுக்கிடும் உண்மைகள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும்  திடுக்கிடும் தகவல்கள்!

ஒட்டுசுட்டானில் கர்ப்பிணி பெண்ணை தேடும் இராணுவம், வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!

உலக கோப்பையை கைப்பற்றிய பிரான்ஸ்; விடுதலை புலிகளின் கொடியை ஏந்தி கொண்டாடும் ஈழத்து மக்கள்!