ரொறொன்டோவில் முதல் தடவையாக அனைவரதும் கவனத்தை ஈர்த்துள்ள இராட்சத பூ!

57shares

கனடா ரொறொன்டோ பகுதியில் மிகப்பெரியதும் விரும்பத்தகாத மணம் கொண்டதுமான அபூர்வ வகைப் பூ ஒன்று ரொறொன்டோ மிருகக் காட்சிசாலையில் மலர்ந்துள்ளது.

அரிதான ஒருவகை இந்தோனேசிய செடியான அமொர்ஃபோபல்லஸ் எனப்படும் கிளைகள் இல்லாத செடியில் பூக்கும் பூ இது மனிதர்களால் விரும்பத்தகாத மணம் கொண்டது.

ரொறொன்ரோ பகுதியில் முதல் தடவையாக மலரவுள்ளது. இப் பூ எதிர்வரும் வாரம் பூக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது.

இந்தச் செடி வெப்ப மண்டல வலயங்களிலேயே வளரக் கூடியவை அத்துடன் முதல் தடவையாக மலர்வதற்கு ஏழு முதல் 10வருடங்கள் வளரவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் விசேடமான இப்பூ மலர்வதைக் காண்பதற்கு அனைவரும் ஆர்வமுடன் உள்ளனர். இந்த மரம் மகரந்த சேர்க்கைக்கு கெரியன் வண்டுகள் மற்றும் ஈக்களை சார்ந்திருக்கும்.

இச் செடியின் பூக்கள் சாதாரண பூக்கள் போன்றவை அல்ல. இதன் நிறம் இரத்த சிவப்பு வடிவமைப்பு கொண்டவை.

பூவை பார்ப்பதற்காக ஏராளமானவர்கள் வருவார்களென எதிர்பார்க்கப் படுகின்றது.

பார்வை நேரம் குறித்த விபரங்கள் அறிவிக்கப்படும் என மிருககாட்சி சாலை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க