முழுகனடாவுக்கும் ஜனவரி தமிழ்ப்பண்பாட்டுமாதம்! ஐ.பி.சி வழங்கும் ஜனவரிசெய்தியின் சிறப்பு என்ன?

  • Prem
  • January 11, 2019
29shares

கனடாவின் வரலாற்றில் தமிழ்கனேடியர்கள் என்ற வலுமிக்க புதிய சமூகஅடையாளம் வந்தபின்னர் 2017ஜனவரி முதல் ஒவ்வொரு ஆண்டின் ஜனவரி மாதத்தையும் கனேடிய அரசாங்கம் தமிழ்ப்பண்பாட்டு மாதமாக பிரகடனப்படுத்தியது.

கனேடிய வரலாற்றில் புதிய ஆண்டின் திறவுகோலை ஒவ்வொரு ஜனவரியும் தமிழ்ப்பண்பாடு கொண்டுள்ளமை ஈழத்தமிழர்கள் அனைவருக்கும்பெருமை.

ஈழத்தமிழர்களின் பெருமையுடன் கனேடிய தமிழர்கள் உவகை கொள்ளும் இதே ஜனவரியில் இந்தஆண்டு இன்னொரு புதிய பெருமைமிகுதடத்தை ஈழத்தமிழர்களின் தனித்துவ ஊடகக்குழுமமான ஐபிசி நாளை பதிவு செய்கிறது.

இது! இந்த ஆண்டு மத்தியில் ரொரன்டோவில் ஐபிசி அரங்கேற்ற காத்திருக்கும் பெருஅரங்க நிகழ்வின் ஒரு கட்டியங்கூறல்.

இதுகாலவரைகாலமும் ஒரு அரங்கத்தில் நிகழாத அற்புதமாக 1000தமிழ் கலைஞர்களை ஒரே மேடையில் ஏற்றி தமிழின் பெருமையை அடுத்த தலைமுறையை நோக்கி நகர்த்தும் முயற்சியின் அதிகாரபூர்வஅறிவிப்பு இது.

' IBC தமிழா - ரொரன்டோ2019'என்ற இந்தப்பெரு அரங்கநிகழ்ச்சி குறித்த அறிமுகத்தையும் நிகழ்ச்சி குறித்த பரிமாணங்கள் வெளிப்படுத்தும் சிறப்பு ஊடகச்சந்திப்பொன்று நாளை (12.09.2019) மார்க்கம் கொன்வென்சன் மையத்தில் ((MarkhamConventionCentre)மாலை 6 மணிக்கு நடைபெறுகின்றது.

இந்த ஊடகச்சந்திப்புக்கு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சார்ந்த பிரதிநிதிகளும் அழைக்கபட்டுள்ளனர். வருகையாளர்கள் தமதுவருகையை ஏற்பாட்டாளர்களிடம் உறுதிப்படுத்தும்படி ஐபிசி குழுமம் கோரிக்கைவிடுத்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க