மிகப்பெரிய விபத்திலிருந்து மயிரிழையில் தப்பிய கனடா விமானம்! ஈழத் தமிழரும் பயணித்தனராம்!!

  • Shan
  • July 12, 2019
1346shares

கனடாவின் வான்கூவரில் இருந்து சிட்னி நோக்கி புறப்பட்ட ஏர் கனடா விமானம், திடீர் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த திடீர் காற்றுக் கொந்தளிப்பால் குறைந்தது 35 பயணிகள் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்தி ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதில் சில ஈழத்தமிழர்களும் பயணித்ததாக அவர்களின் முகநூல் பதிவுகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் 269 பயணிகள் உள்ளடங்கலாக 15 பணியாளர்களுடன் வன்கூவரிலிருந்து புறப்பட்ட எயார் கனடா விமானமானது இரண்டு மணித்தியாலங்களின்பின்னர் ஹவாய்க்கு அண்மையில் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீர் காற்றழுத்தத்தை உணர்ந்தது. இதனால் விமானம் தனது சம நிலையை இழந்து காற்றில் தத்தழித்தது.

இதனால் விமானத்தினுள் ஏற்பட்ட சமனற்ற தன்மையினால் ஆசனப் பட்டி அணியாத பயணிகள் விமானக் கூரையுடன் மோதினர். இந்த மோதல்களினாலேயே பயணிகளுக்கு காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் திறமையாகச் செயற்பட்ட வானோடிகள் குறித்த காற்றுக் கொந்தளிப்பிலிருந்து விமானத்தை மீட்டு ஹவாயின் ஹொனொலுலுவிலுள்ள டானியேல் K.இனோயுயே சர்வதேச விமானத்தளத்தில் அவசரமாக தரையிறக்கினர்.

காயமடைந்த பயணிகளுக்கு ஹொனொலுலுவிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறினார்.

இதேவேளை விமானப் பணிப்பெண்கள் ஆசனப்பட்டியை அணியுமாறு கூறியதை அலட்சியம்செய்ததனாலேயே சில பயணிகள் காயங்களுக்கு உள்ளாகியதாக அதில் பயணித்த ஈழத்தமிழர் ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் உலகில் மீண்டுமெரு மிகப்பெரிய விமான விபத்திலிருந்து ஏர் கனடா விமானம் நேற்றைய தினம் மீண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உலகளவில் இடம்பெற்ற விமான விபத்துக்களுக்கு, இதுபோன்ற திடீர் காற்றுக் கொந்தளிப்பில் விமானம் சிக்குவதும் ஒரு காரணம் என கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதையும் தவறாமல் படிங்க