கனடாவுக்கு சென்றபோதிலும் இலங்கையரின் நன்றிக்கடனை மறக்காத தந்தை, மகனின் நெகிழ்ச்சியான செயல்!

94shares

வெளிநாடொன்றிலிருந்து உயிரை பிடித்தபடி ஒடி வந்தவருக்கு இலங்கையில் உதவிய நண்பருக்கு கிடைத்த நன்றிக்கடன் தொடர்பான நெகிழ்ச்சியான செய்தி வெளிவந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

பாகிஸ்தானிலிருந்து மத நிந்தனை செய்ததாக தெரிவித்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட Farrukh ம் அவரது தந்தை Mushtaq Gill ம் விடுதலை செய்யப்பட்டபோது, மீண்டும் வீடு திரும்பினால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்பதால் இலங்கையில் அடைக்கலம் தேடினர்.

அதே பாகிஸ்தானில் இஸ்லாமிய பெண் ஒருவரை மணம்முடித்ததற்காக அச்சுறுத்தலுக்குள்ளான Shakeeb, உயிர் தப்ப மனைவியுடன் இலங்கை வந்து சேர்ந்தார். இரண்டு குடும்பங்களும் 2014 இல் சந்தித்து நெருங்கிய நண்பர்களாகியுள்ளனர்.

2014 இறுதியில் Mushtaqம் அவரது தந்தையும் கனடாவில் அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட, 2015 பெப்ரவரியில் கனடா வந்து சேர்ந்தனர்.

கண்ணீருடன் இரு குடும்பங்களும் விடை கொடுக்கும்போது, தன்னையும் தன் குடும்பத்தையும் மறந்துவிட வேண்டாம் என்று கூறியுள்ளார் Shakeeb.

கனடா வந்ததும் அங்குள்ள ஒரு கிறிஸ்தவ திருச்சபையினர் Refugees 4 Refugees என்ற அமைப்பினருடன் சேர்ந்து Mushtaq குடும்பத்தை ஸ்பொன்சர் செய்துள்ளனர்.

ஒரு கணம் கூட அவர்கள் தங்களை அந்நியராக கருதவிடவில்லை என்று கூறும் Mushtaq, அகதிகளின் நிலை எப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும் ஆனால் கனடாவுக்கு அகதிகளாக வந்தது எங்கள் அதிர்ஷ்டம் என்கிறார்.

நல்லபடியாக கனடாவில் குடியமர்ந்ததும், Mushtaqஇன் தந்தை அவரிடம், நாம் ஒரு புது நாட்டில் குடியேறியிருந்தாலும், உலகின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நமக்கு பல வகையில் உதவியிருக்கிறார்கள், அவர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

Mushtaqம் மறக்கவில்லை, தாங்கள் இலங்கையில் இருந்தபோது தங்களை அன்புடன் கவனித்துக் கொண்ட Shakeeb, அவரது மனைவி மற்றும் தங்கை ஆகியோர் கனடாவுக்கு வர ஸ்பொன்சர் செய்திருக்கிறார்.

கடந்த மாதம் (செப்ரெம்பர்) 8ஆம் திகதி Shakeeb குடும்பத்தினர் கனடா வந்தடைந்துள்ளார்கள்.

சமீபத்தில் அனைவரும் சேர்ந்து ஏற்பாடு செய்த விருந்தொன்றில், தங்கள் தாய்நாட்டில் செய்யப்படும் பாரம்பரிய பாயாசம் ஒன்றுடன் Thanksgivingஐக் கொண்டாடியுள்ளார்கள்.

இதையும் தவறாமல் படிங்க
உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

உலகுக்கு விடுக்கப்பட்டது “கறுப்புச்சாவு” அச்சுறுத்தல்! சீனாவில் மீண்டும் பிளேக் பயங்கரம்

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

கடைசி நேரத்தில் விடுதலைப்புலிகளின் தளபதிகள் கூறியதாக காலம் கடந்து வெளியான தகவல்!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!

அத்துமீறினால் தாக்கி அழிப்போம்: அமெரிக்காவை எச்சரித்துள்ள சீனா!