யாழ்ப்பாண தமிழ் சகோதரர்கள் கனடாவில் கைது !

110shares

கனடாவில் பெருமளவான கார்திருட்டில் ஈடுபட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் சகோதரர்கள் இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்கார்பாரோவில் வசித்துவரும் யாழ்ப்பாண தமிழ் சகோதரர்களான கபிலன் விக்னேஸ்வரன் (24) மற்றும் நகுலன் விக்னேஸ்வரன் (30) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்கள் இருவரும் விபத்தில் சிக்கிய வாகனங்களை இழுத்துச் செல்லும் நிறுவனமொன்றை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விபத்தில் சிக்கிய கார் ஒன்றை பலவந்தமாக இழுத்து செல்ல முயன்றபோது, வாகனத்தின் உரிமையாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து இருவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் ஏற்கனவே பல கார் திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்தது.

கனடாவில் விபத்தில் சிக்கிய வாகனங்களை, இழுத்து செல்லும் நிறுவனங்களுக்கிடையில் கடும் பேபட்டி நிலவுகின்றது.விபத்தொன்று இடம்பெற்றால் அந்த வாகனத்தை இழுத்துச் சென்று பழுது பார்க்கும் நிலையங்களில் விடுவதற்கும் கடும் போட்டி நிலவுகின்றது.

குறித்தஇரண்டு சகோதரர்களும் பழுது பார்க்கும் நிறுவனங்களுக்கு முகவர்களாகச் செயற்படுகின்றனர்.எனினும் அவர்கள் இழுத்துச் செல்லும் விபத்துக்குள்ளான வாகனங்களை முறையாக பழுது பார்க்கும் இடங்களில் சேர்ப்பதில்லை என கூறப்படுகிறது.

அண்மையில், கனடாவின் ஈஸ்ட் எக்லிண்டன் அவென்யூ மற்றும் வார்டன் அவென்யூ அருகே விபத்தில் சிக்கிய வாகனத்தின் உரிமையாளர், வாகனத்தை இழுத்துச் செல்ல நிறுவனமொன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதற்குள் அந்த பகுதிக்கு வந்த இந்த இரண்டு தமிழ் சகோதரர்களும் தமது இழுத்து செல்லும் வாகனத்தில், விபத்திற்குள்ளான வாகனத்தை கொழுவியுள்ளனர்.

வாகனத்தின் உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தபோதும், அதை பொருட்படுத்தாமல் அவர்கள் அந்த வாகனத்தை இழுத்துச் சென்றனர். இது குறித்து வாகன உரிமையாளர், பொலிசாருக்கு தகவல் வழங்கினார்.

மான்வில் வீதியில் உள்ள கபி ஓட்டோ இன்க் நிறுவனத்திற்கு அந்த கார் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

அங்கு சென்ற பொலிசார் விசாரணைகளை நடத்தினர். ஆரம்பத்தில் அங்கு பொலிசார் உள்நுழைய, உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பொலிசார் அங்கு நடத்திய சோதனையில் திருடப்பட்ட இரண்டு விலை உயர்ந்த சொகுசுகார்களும் அங்கு மீட்கப்பட்டன.

தமிழ் சகோதரர்களே அவற்றை திருடினார்கள் என்பது விசாரணைகளில் இருந்து தெரிய வந்தது. 2015 பி.எம்.டபிள்யூ எம் 4 மற்றும் 2017 ஃபெராரி 4 ஜிஎஸ் ஆகிய கார்களே மீட்கப்பட்டன.

வாகன திருட்டு உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

விசாரணைக்கு அழைக்கும்போது முன்னிலையாக வேண்டுமென்ற நிபந்தனையுடன் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

You May Like This

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

வெளிநாட்டிலிருந்து வந்த 157 பேருக்கு கொரோனா தொற்று

வெளிநாட்டிலிருந்து வந்த 157 பேருக்கு கொரோனா தொற்று

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு

தீவிரமடையும் கொரோனா! அமெரிக்கா விதித்துள்ள மற்றுமொரு தடையுத்தரவு