கொரோனாவின் பிடியிலிருந்து முழுமையாக குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி!!

233shares

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி கொரோனாவிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 நாட்களாக கொரோனாவுக்காக சிகிச்சை எடுத்து வந்த சோபியின் உடல்நிலை நன்றாக உள்ளது என ஜஸ்டின் நேற்று கூறியிருந்த நிலையில் தற்போது அவர் முழுவதுமாக குணமடைந்தார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அவருக்கு கொரோனா இல்லை என்பதை அவரது மருத்துவரும் ஒட்டாவா சுகாதாரத் துறையும் உறுதிப்படுத்தியுள்ளது.

கனடா பிரதமர் ஜஸ்டினின் மனைவி சோபி இந்த மாத தொடக்கத்தில் பிரிட்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றுவிட்டு கனடா திரும்பியிருந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்மை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கனடாவில் 5,616 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 61 பேர் பலியாகிவிட்டனர். 445 பேர் குணமடைந்துவிட்டார்கள்.

கொரோனாவால் தனது மனைவி மருத்துவமனையில் இருந்த போதும் தனது நாட்டு மக்களுக்காக பொருளாதார ரீதியிலான அறிவிப்புகளை ஜஸ்டின் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

லண்டனில் இலங்கைத்தமிழரான மருத்துவர் அயர்லாந்து தாதியை வைத்தியசாலையில் கரம்பிடித்தார்

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை

அமெரிக்காவின் சோகமான சாதனை -டுவிட்டரில் ட்ரம்ப் வேதனை