நயன்தாராவின் கொலையுதிர் காலம் திரைப்படம்! முக்கிய கதாபாத்திரத்தில் ஈழத் தமிழ் கலைஞர்!!

340shares

லேடி சூப்பர் ஸ்டார் என்று இன்று அழைக்கப்படுகின்ற நயன்தாரா நடிப்பில் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கின்ற கொலையுதிர் காலம் த்ரில்லர் திரைப்படத்தில் ஈழத் தமிழ் கலைஞரான பிரேம்கதிர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார்.

பல சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல குறும்பட இயக்குனரான பிரேம்கதிர், இந்த திரைப்படத்தின் ஊடாக தென்இந்திய நடிப்புத்துறைக்குள் நுழைகின்றார்.

பிரேம்கதிர் ஐ.பி.சி. தமிழ் தொலைக்காட்சியில் Creative Directorஆகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைத்துறைக்காக தன்னை அர்ப்பணித்துள்ள பிரேம்கதிர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள கொலையுதிர் காலம் திரைப்படத்தின் ஊடாக அவரது கலைப்பயணம் வெற்றிபெற IBC-தமிழ் அவரை வாழ்த்துகின்றது.

இதையும் தவறாமல் படிங்க