தமிழ் திரைப்படத்தின் நடிகை காலமானார்

67shares

தமிழ்த் திரைப்பட நடிகையும் பின்னணி பாடகியுமான பரவை முனியம்மா இன்று மதுரையில் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

76 வயதான பரவை முனியம்மா முதுமை மற்றும் உடல்நலக்குறைவுகாரணமாக உயிரிழந்துள்ளார்.

அவர் சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

தூள் படத்தில் வரும் சிங்கம் போல.. பாடல் இவருக்கு மிகவும் பிரபலமானது. மேலும் தனது நாட்டுப்புறப் பாடல்களாலும் தனது கிராமிய பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் பரவை முனியம்மா.

தூள், சண்டை, காதல் சடுகுடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.

2000க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளில் தன் பாடல் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

இவரது கலைச் சேவையை பாராட்டி தமிழக அரசு இவருக்கு கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

Tags : #India #Death
இதையும் தவறாமல் படிங்க
இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

இந்தியா - சீனா போர் பதற்றம் : இந்தியாவின் உளவு விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

சர்ச்சையை ஏற்படுத்திய சரத் பொன்சேகாவின் கருத்து!

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி

யாழில் கூலித் தொழிலாளிக்கு சட்டத்தரணி ஒருவர் செய்த பாரிய மோசடி