பிரபல நடிகர் உட்பட குடும்பத்துக்கே தொற்றியது கொரோனா

840shares

இந்தியாவின் பிரபல நடிகர் உட்பட குடும்பத்தினருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.

தெலுங்கு படவுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி ஜீவிதா. இவர் முன்னாள் நடிகையாவார்.

நடிகர் ராஜசேகர் புதிய படமொன்றின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள தயாராகி வந்துள்ளார். ஆனால் கடந்த வாரம் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்புகளுக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.

இதனால் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். அதன் முடிவில் அவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்புகள் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து அவர்கள் தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நடிகர் ராஜசேகரின் மகள்களான நடிகைகள் சிவாத்மிகா ராஜசேகர் மற்றும் சிவானி ராஜசேகர் ஆகிய இருவரும் குணமடைந்து உள்ளனர்.

இதுபற்றி நடிகர் ராஜசேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எனக்கும், ஜீவிதாவுக்கும் மற்றும் எங்களது குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளோம்.

எனது இரு குழந்தைகளும் குணமடைந்து விட்டனர். நானும் ஜீவிதாவும் நலமுடனே இருக்கிறோம். விரைவில் குணமடைந்து வீடு திரும்புவோம். நன்றி என தெரிவித்து உள்ளார்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஆதரிக்க முடியாது -  மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

ஆதரிக்க முடியாது - மைத்திரி எடுத்த அதிரடி முடிவு? ஜனாதிபதி, பிரதமருக்கு பகிரங்க அறிவிப்பு

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

திரைமறைவில் காய்களை நகர்த்திய பசில்! ஸ்ரீலங்கா அரசியலில் மற்றொரு திருப்பம்?

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்