பிரபல நடிகருக்கு கொரோனா -ரசிகர்கள் கவலை

505shares

படப்பிடிப்பில் கலந்து கொண்ட தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நடிகரும் இயக்குநருமான ப்ரித்விராஜ் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நான் கடந்த 7ம் திகதி முதல் டிஜோ ஜோஸின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறேன். நாங்கள் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தான் படப்பிடிப்பில் கலந்து கொண்டோம். ஷெட்யூலை தொடங்கும் முன்பு அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. கோர்ட் ரூம் செட்டில் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்த பிறகு அனைவருக்கும் மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக எனக்கு பொசிட்டிவ் என்று இம்முறை ரிசல்ட் வந்துள்ளது.

இதையடுத்து நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். எனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பின் எந்த அறிகுறியும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் குணமாகி படப்பிடிப்புக்கு திரும்புவேன் என்று நம்புகிறேன். உங்கள் அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா வைரஸ் பிரச்சனை ஏற்பட்டு லொக்டவுன் அமல்படுத்தப்பட்டபோது ப்ரித்விராஜ் ஜோர்டானில் பாலைவனத்தில் சிக்கிக் கொண்டார். ஆடுஜீவிதம் படப்பிடிப்புக்காக அங்கு சென்ற போது லொக்டவுன் அமுலுக்கு வந்து சர்வதேச விமானங்கள் இயக்கப்படாததால் நாடு திரும்ப முடியாமல் தவித்தார்.

அதன் பிறகு மே மாதம் தான் அவர் நாடு திரும்பினார். நாடு திரும்பிய அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். அப்பொழுது எல்லாம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தற்போது சொந்த மாநிலத்தில் இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

முன்னதாக ஷூட்டிங்கில் கலந்து கொண்ட தமன்னாவுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

இலங்கையரை காதலித்து ஜப்பானிலிருந்து இலங்கைக்கு வந்த சிறுமி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ் குடாநாடு முடக்கம் தொடர்பில் சுகாதார பணிப்பாளர் மக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி

இந்திய அரசு கோட்டாபயவுக்கு வழங்கியுள்ள உறுதிமொழி