திடீரென உயிரிழந்த மருத்துவ நண்பனுக்காக சந்தானம் செய்த நல்ல காரியம் -ரசிகர்கள் பாராட்டு

398shares

மறைந்த நடிகரும் மருத்துவருமான சேதுராமனின் புதிய மருத்துவமனையை நடிகர் சந்தானம் திறந்து வைத்துள்ளதை அவரது ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

தோல் மருத்துவரான சேதுராமன் சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் பிரபலமானார். மருத்துவத்துடன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த மார்ச் மாதம் 26ம் திகதி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

35 வயதில் மாரடைப்பால் மரணமா என்று ரசிகர்கள் வேதனை அடைந்தனர். சேதுராமன் இறப்பதற்கு முன்பு ஈசிஆர் பகுதியில் தனது கிளினிக்கின் புது கிளையை தொடங்க பூஜை போட்டார். அந்த பூஜையின்போது எடுக்கப்பட்ட வீடியோவை சேதுராமன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்திருந்தார். அவர் இறந்த பிறகு ஈசிஆர் கிளையை தொடங்குவார்களா, என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் கணவன் விட்டுச் சென்ற வேலையை அவரின் மனைவி உமா தொடர்கிறார். இதையடுத்து ஈசிஆர் கிளையின் வேலைகளை முடித்து சேதுராமனின் பிறந்தநாளான இன்று மருத்துவமனையை தொடங்கியுள்ளனர். சேதுராமனின் நெருங்கிய நண்பரான சந்தானம் அந்த மருத்துவமனையை திறந்து வைத்துள்ளார்.

மருத்துவமனையில் சேதுராமனின் ஆளுயர கட்அவுட்டை வைத்துள்ளனர். அந்த கட்அவுட்டுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை சந்தானம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். கட்அவுட்டில் சிரித்த முகமாக இருக்கும் சேதுராமனுடன் சந்தானத்தை பார்த்த ரசிகர்கள் தமது உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர்.


you may like this

இதையும் தவறாமல் படிங்க
பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

பதவியிலிருந்து விலகும் நேரம் ட்ரம்ப் விடுத்துள்ள உத்தரவு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? இன்று வெளியான அறிவிப்பு

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி

பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலையில் இருந்து இலங்கையர் வெளியிட்ட செய்தி