வெசாக் அலங்காரத்தால் முழுவதும் மாறிப்போன கிளிநொச்சி நகரம்

285shares

தேசிய ஒற்றுமை மற்றும் சமய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சியில் நேற்று வெசாக் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த வெசாக் நிகழ்வானது கிளிநொச்சி படைமுகாம்களின் கட்டளைத்தளபதி மேஜர் ஜென்ரல் நிசங்க ரணவன தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட வெசாக் அலங்காரப் பந்தல்கள் நேற்று மாலை 7.00 மணிக்கு திறந்து வைக்கப்பட்டதுடன் தன்சல் பந்தலும் திறந்து வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்ட பல வர்ண மின்குமிழ் வெளிச்சத்தினால் அலங்கரிக்கப்பட்ட வெசாக் அலங்கார கூடுகளை பார்ப்பதற்கு சுமார் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த நிகழ்வு இன்றும் தொடர்ந்து நடைபெறுகின்றது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள் தன்சல்கள் தோரணைகள் மற்றும் கொடிகளைப் பார்ப்பதற்கு இது கிளிநொச்சியா? என்று எண்ணும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க