ஆபத்தில் தென்னிலங்கை; அச்சுறுத்துகிறது மர்ம நோய்: இதுவரை இருவர் பலி!

107shares

இந்தியாவின்தம்பதிவ யாத்திரைக்க சென்று திரும்பிய சிறிலங்காவின் தென்பகுதி பிரதேசமான மாத்தறை மாவட்டத்தின்தெனியாய பகுதியைச்சேர்ந்த இருவர் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இன்னமும் அடையாளம் காணப்படாத இந்த வைரஸ்காய்ச்சலுக்கு மேலும் ஏழு பேர் பாதிக்கப்பட்ட நிலையில் காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்குமேலதிக கிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக எமது மாத்தறை செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தியாவின்தம்பதிவ யாத்திரைக்கு கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி புத்தகயா வழிபாடுகளுக்காக சென்று நவம்பர் 25 ஆம் திகதி நாடு திரும்பியிருந்த தென்பகுதி பிரதேசமான மாத்தறையைச் சேர்ந்தஇருவரே வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்திருக்கின்றனர்.

இவர்களில் ஒருவர்நேற்று முன்தினம் தெனியாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்க நிலையில் உயிரிழந்துள்ளார்.

இரண்டாவது நபர் இன்று காலைதெனியாய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

லைரஸ் தொற்றுக்க ஆளாகி உயிரிழந்தவர்கள் 67 வயதுடைய தெனியாய கிரிவெல்தொல பிரதேசத்தை சேர்ந்த டீ.ஜெயன்நோனா மற்றும் அதேஇடத்தை சேர்ந்த 62 வயதுடைய ஆர்.எல்.சோமாவதி என அடையாளம்காணப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளர்.

இதனையடுத்து தம்பதிவ பகுதிக்கு சென்ற 38 பேர் தெனியாய வைத்தியசாலைக்கு அழைத்துவரப்பட்டு பரிசோதணைகளுக்குஉட்படுத்தப்பட்டுள்ளனர்

இதற்கமைய இவர்களில் 7 பேருக்கு வைரஸ் தொற்று காணப்படுவதாக தெரிவித்து காலி கராபிட்டியவைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த காய்ச்சலுக்கான சரியான காரணம் தெரியாத நிலையில்வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் முககவசம் அணிந்து பணியில் ஈடுப்பட்டு வருவதாக எமதுசெய்தியாளர் தெரிவித்தார்.

காய்ச்சல் தொடர்பான பரிசோதனைகளை வைத்தியர்கள்மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் தவறாமல் படிங்க