திணறும் தோட்டத் தொழிலாளர்கள்: அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் மலையக கட்சிகள்

6shares

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்குஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்படும் வரை பணிப்புறக்கணிப்பு போராட்டம்தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அமைச்சுப் பதவியை இழந்த நிலையில் இருக்கும் இலங்கைதொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் அறிவித்துள்ளார்.

எனினும் தாம் வேலைக்குசெல்லவில்லை என்றால் தமக்கு வருமானம் இல்லை என தெரிவித்துள்ள மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், இதனால் பாதிப்படைவது தாமே எனவும் கவலை வெளியிட்டிருக்கின்றனர்.

தோட்ட தொழிலாளர்களுக்கானசம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை காலவதியாகியுள்ளநிலையில் அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்றுத்தருமாறு கோரி மலையம்முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் முதலாளிமார்சம்மேளனத்துடனான பேச்சுக்களில் தொழிற்சங்கங்கள் தோல்வி அடைந்து வருகின்றன.

இந்நிலையில் தோட்டதொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரி நேற்று செவ்வாய்க்கிழமை மலையகம்முழுவதும் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பெருந்தோட்டங்களில்தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போராட்டம் இரண்டாவது நாளாக வெற்றிகரமாகமுன்னெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் பொகவந்தலாவகெர்க்கஸ்வோல்ட் தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக இன்று புதன்கிழமை டயர்களை எரித்துதொழிலாளர்கள் சுமார் இரண்டு மணி நேரம் ஆர்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

ஒரு சாரார் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபடாது தேயிலை மலைக்கு சென்று களை பறிக்கும் வேலையில்ஈடுபட்டிருந்த போதிலும் பின்னர் அவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ஆரம்பித்ததாகஎமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதனையடுத்த தமது ஆர்ப்பாட்டத்தைதொடர்ந்த தொழிலாளர்கள் தேயிலை தொழிற்சாலைகளில் உள்ள காவலாளிகளையும் வெளியேறுமாறுவலியுறுத்தியுள்ளார்.

தமக்கு எந்த கட்சி உரியசம்பளத்தை பெற்றுக்கொடுக்கின்றது என்பது அவசியமில்லை எனவும் அனைத்து மலையகமக்களும் இணைந்து இந்த வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

எனினும் தொடர்ந்தும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தால் இது தமக்கே நட்டத்தை ஏற்படுத்தும் என தொழிலாளர்கள்தெரிவிக்கின்றனர்.

கொத்மலை கட்டுகித்துல ஹெல்பொட தோட்டத்திலும்இன்று வேலை நிறுத்த போராட்டம் இடம்பெற்றுள்ளது.

அதன் போது டயர்கள் கொழுத்தியும்கோஸங்கள் எழுப்பியும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

இவ்வாறு தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தை ஆரம்பித்துள்ள தொழிலாளர்களை தோட்டவாரியாக இன்று புதன்கிழமைஇலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் நேரில் சென்று சந்தித்திருந்தார்.

இதன்போது தோட்ட கம்பனிகளுக்குஅழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெறும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்து வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும்என தெரிவித்தார்.

இதேவேளை இன்று கெழும்பில்இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த மலையக மக்கள்முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஸ்ணன், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான அடிப்படை சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாமல்தொழிற்சங்கங்கள் திணருவதாக குறிப்பிட்டார்.

தொழிலாளர்களுக்கு நியாயமானசம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய வே.இராதாகிருஸ்ணன், இதற்காகதொழிலாளர்களை கஷ்டப்படுத்துவது கவலையளிப்பதாகவும் இயன்றவர்கள் மாத்திரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறும்கேட்டுக்கொண்டார்.

பெருந்தோட்ட கம்பனிகள்தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதாக ஒருபோதும் இணக்கம்தெரிவிக்கவில்லை எனவும் இந்த விடயத்தில் தனித்து நின்று போராடி மக்களைபலிக்கடாவாக்க வேண்டாம் எனவும் தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம்வலியுறுத்தினார்.

இதையும் தவறாமல் படிங்க