உலககிண்ணத்துக்கான இலங்கை அணிதேர்வில் இடம்பெற்ற பேரதிர்ச்சி!

343shares

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவின் உறுப்பினர் ஒருவர் உலக கிண்ணப்போட்டிகளில் விளையாடும் அணியில் வீரர் ஒருவரை சேர்த்துக்கொள்வதற்காக இலஞ்சம் பெற்றார் என்ற செய்தி இணையத்தளங்களில் வெளியாகியுள்ளதுடன் இலங்கை கிரிக்கெட்டில் பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உலக கிண்ண அணியில் குறிப்பிட்ட வீரர் ஒருவரை தெரிவுசெய்வதற்கு தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் வீரரின் போட்டித் தொகையிலிருந்து பத்து வீதத்தினை பெற்றுக்கொண்டார் என இணையத்தளமான கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது.

சகலதுறை வீரரான ஒருவரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டு அந்த வீரரை தெரிவுக்குழு உறுப்பினர் ஒருவர் உலக கிண்ண அணியில் சேர்த்துள்ளார் என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது

குறிப்பி;ட்ட வீரர் இறுதி நிமிடத்திலேயே அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் ஊடகங்களுக்கு வெளியிடுவதற்காக தெரிவுக்குழுவினர் தெரிவு செய்திருந்த அணியில் இந்த வீரரின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. மேலும் இவர் தென்னாபிரிக்காவில் ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணியில் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது.

உலக கிண்ண போட்டிகளுக்கான வீரர்களை தெரிவு செய்வதற்காக இடம்பெற்ற போட்டிகளிலும் இந்த வீரர் சிறப்பாக விளையாடவில்லை என கிரிக்கெட் ஏஜ் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க