லண்டனில் வசிக்கும் குடு லாலுக்கும் கொழும்பில் கொல்லப்பட்ட கிருஷ்ணாவுக்கும் என்ன தொடர்வு?

542shares

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே. கிருஷ்ணாவிற்கும்

“குடு லால்” என்றழைக்கப்படும் லால் பீரிஷிற்கும் நெருங்கிய தொடர்வு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி பிறந்த கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் தனது 39ஆவது வயதில் இனந்தெரியாத நபரினால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இம்முறை உள்ளூராட்சிசபை தேர்தலில் கொழும்பு மாநகரசபைக்கு நவோதயா மக்கள் முன்னணியின் சார்பில் இரு உறுப்பினர்கள் விகிதாசார முறையில் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைப் பெற்றார்கள்.

இதில் அந்தக் கட்சியின் தலைவர் கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தன் உடன் எஞ்சிய ஆசனத்தை பங்கீட்டுக்கொண்டவர்,

“குடு லால்” என்றழைக்கப்படும் லால் பீரிஷின் சகோதரர் சுமீர பீரிஷ் என்பவர் என தெரியவந்துள்ளது.

சுமீர பீரிஷ் மற்றும் சமீர பிரிஷ் ஆகியோர் இரட்டையர்கள் எனவும் இவர்கள் இருவருமே இம்முறை கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தனுடன் இணைந்து கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டனர்.

இருந்தும் இரட்டையர்களில் ஒருவரான சமீர ஆசனம் பெறும் வாய்ப்பை இழந்தார்.

கொழும்பு அரசியலில் வளர்ந்து வரும் இளம் அரசியல்வாதியாக திகழ்ந்த கிருஷ்ணாவின் எழுச்சி பலரின் வாக்கு வங்கிகளில் பெரும் பெரும் சரிவை ஏற்படுத்தக் கூடிய நிலைய ஏற்படுத்தி இருந்தது என்று கூறப்படும் நிலையில் இவரது கொலை இடம்பெற்றுள்ளது.

அன்மையில் சமகால அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சி ஒன்றிலிருந்து விலகிச் சென்ற கிருஷ்ணா, நவோதய மக்கள் முன்னணி என்ற பெயரில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் கடந்த 24 மணிநேரத்தில் கொழும்பில் 05 கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணப்பிள்ளை கிருபானந்தனின் கொலையுடன் சேர்த்து அன்றைய 24 மணி நேரத்தில் 05 கொலைகள் பதிவாகி உள்ளதாகவும் இதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க