பிரதேச செயலாளரின் போலி ஆவணத்தை காட்டி மரம் கடத்திய குழு சிக்கியது!

41shares

மட்டக்களப்பு – பெரிய புல்லுமலை அரசாங்க வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டி கடத்தப்பட்ட ஒரு தொகுதி தேக்கு மரக் குற்றிகளை இன்று கரடியனாறு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


செங்கலடி பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்டது போன்ற போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை காட்டி மரத்தை கொண்டு செல்ல முயன்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


குறித்த மரங்கள் அனைத்தும் வனஇலாக்காவுக்கு சோந்தமான பிரதேசத்தில் இருந்து வெட்டப்பட்டுள்ளதால் வனபரிபாலன திணைக்கள அதிகாரிகளுக்கு இதில் சம்பந்தம்

இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


செங்கலடி பிரதேசத்தில் அண்மைக்காலமாக இதுபோ‌ன்ற மரக்கடத்தல்கள் அதிகரித்துள்ளதாக பொலீசர் தெரிவித்துள்ளனர்.


கைப்பற்றப்பட்ட மரக் குற்றிகள் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட டிப்பர் ரக வாகனம் மற்றும் சாரதியை ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளதாக கரயடினாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தெரிவித்துள்ளார்.


பெரிய புல்லுமலை அரச வனப் பகுதியில் சட்டவிரோதமாக வெட்டபட்ட மரக்குற்றிகள் ஏறாவூரிலுள்ள மர ஆலைக்கு கொண்டு செல்லும் வழியில் கைப்பற்றப்பட்டன.


இதேவெளை, வாகனத்தில் 13 தேக்கு மரக் குற்றிகள் காணப்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க