சித்திரவதைகளுக்கு பதில் எங்கே? சிறிலங்காவிடம் ஐ.நா கேள்வி

33shares

கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில்இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் இரண்டு வருடங்களாக எழுப்பப்பட்டுவரும்கேள்விகளுக்கு பதில் அளிக்காது இருப்பது தொடர்பில் சிறிலங்கா அரசிடம் ஐக்கியநாடுகள் சபை மீண்டும் வினவியுள்ளது.

சிறிலங்காவிற்கு இதனை மீண்டும் ஞாபகப்படுத்தி ஐக்கியநாடுகள் சபை கடிதமொன்றை அனுப்பி ஒருவாரகாலம் முடிவடைவதற்குள், ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இந்தமாத கூட்டத் தொடரிற்கு என்ன பதிலை அளிப்பதுஎன்பது குறித்து மக்களின் கருத்துக்களை அறியும் அமர்வொன்றையும் சிறிலங்கா அரசுஏற்பாடுசெய்திருக்கின்றது.

UNCAT என்றழைக்கப்படும் சித்திரவதைகளுக்கு எதிரான ஐக்கிய நாடுகள்குழு சிறிலங்காவிடம் 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜெனீவாவில் வைத்து எழுப்பியகேள்விகளுக்கு 2017 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் திகதிவரை கால அவகாசம் வழங்கியிருந்தபோதிலும், சிறிலங்காவினால் இதுவரை எந்தவொரு பதிலும்தெரிவிக்கப்படவில்லை.

( ABDELWAHAB HANI UN) ஐக்கிய நாடுகள் சபையின்சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் அமர்வு நடைபெற்று ஒருவருடம் பூர்த்தியடைந்துள்ளபோதிலும் தது குழுவினால் கோரப்பட்டிருந்த எந்தவொரு தரவுகளும் இதுவரைவழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டு குறித்த குழுவின் மீளாய்வுப் பிரிவின் அதிகாரிஅப்தெல்வாஹாப் ஹனி கடந்த ஓகஸ்ட் 20 ஆம் திகதி சிறிலங்காவிற்கு அனுப்பிவைத்திருந்தகடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

சித்திரவதைகளுடன் தொடர்புடைய அதிகாரிகள் தொடர்பிலும், சித்திரவதைகளுக்குஉள்ளானவர்களுக்கான நீதியை நிலைநாட்டுவது தொடர்பிலும் இந்தக் கடிதத்தில் அதிக கவனம்செலுத்தப்பட்டிருந்தது.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், அதற்குப்பின்னரும் கைதுசெய்யப்பட்டிருந்த போது மேற்கொள்ளப்பட்ட கொடூரமானசித்திரவதைகளுக்கான குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள சிறிலங்கா அரசின் புலனாய்வுப்பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் தொடர்பில் UNCAT 2016 ஆண்டுகாரசாரமான கேள்விகளை எழுப்பியிருந்தது.

சிசிர மெண்டிஸ் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 ஆம்ஆண்டு யூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் CID என்ற பொலிஸ் குற்றப் புலனாய்வுத்திணைக்களத்தினதும், TID என்ற பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினதும் பணிப்பாளராக கடமையாற்றிய போது, தடுப்பில்இருந்தவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பிலான உண்மைகளைவெளிப்படுத்திக்கொள்வதே இந்த கேள்விகளின் பிரதான நோக்கமாக இருந்திருந்தது.

எனினும் UNCAT 2016 ஆம் ஆண்டு அமர்வில் கலந்துகொண்டிருந்த சிறிலங்கா அரச பிரதிநிதிகளில் ஒருவராகஇடம்பெற்றிருந்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி எந்தவித பதிலையும்வழங்காது மௌனம் காத்திருந்தார்.

பிரதி பொலிஸ் மாஅதிபர் சிசிர மெண்டிசி பதவி வகித்த காலப்பகுதியில் தடுப்பில் இருந்த கைதிகளுக்குஇழைக்கப்பட்டிருந்த சித்திரவதைகள் தொடர்பிலான விரிவான விபரங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையொன்றை அதேவேளை JDS என்ற சிறிலங்காவின் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்புஉள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் UNCAT இடம் கையளித்திருந்தன. இவை தொடர்பிலும் UNCAT சிசிர மெண்டிஸிடம் தொடர்ச்சியாக கேள்விக் கணைகளைத்தொடுத்த போதிலும், எந்தவொரு பதிலையும் கூறாது வாய் அடைத்துப்போயிருந்தார்.

அது மாத்திரமன்றி சிறிலங்கா அரசாங்கமும் இந்தக்குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருக்கவில்லை.

பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட சித்திரவதைகள்,பலவந்தமாக ஆட்களை காணாமல் ஆக்கப்படுவது மற்றும் பாரதூரமான மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட நீதிமன்றக்கட்டமைப்பொன்றை உருவாக்குமாறும் சிறிலங்கா அரசிடம் UNCAT கோரிக்க விடுத்திருந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களின் பாதுகாப்பைஉறுதிசெய்வதற்காக பொலிஸ் திணைக்களத்தின் கீழ் சுயாதீனமான அலுவலகமொன்று அமைக்கப்படவேண்டும் என்றும் UNCAT பரிந்துரைத்திருந்தது.

இந்த அலுவலகத்திற்காக நியமிக்கப்படும் அதிகாரிகள் மனிதஉரிமை மீறல்களில் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்கு அவர்களைமுன்கூட்டிய முழுமையான மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள்குழு வலியுறுத்தியிருந்தது.

எவ்வாறாயினும் சிறிலங்காஅரசு 2016 ஆம் ஆண்டு நிறுவிய சாட்சியாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களைபாதுகாப்பதற்கான அதிகார சபைக்காக சிறிலங்கா அரச தலைவர் ஐந்து அதிகாரிகளைநியமித்தார். இவர்களில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதி பொலிஸ்மாஅதிபர் ஆகியோரும் அடங்குவர்.

எனினும் அதிகார சபையின் தலைவர் உட்பட மூன்று அதிகாரிகளைஉடனடியாக நீக்க வேண்டும் என்று சிறிலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமானஅமைப்பான ITJP சிறிலங்கா அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது.

தேசிய அதிகார சபையின் தலைவரான சுஹத கம்லத் முன்னாள்புனர்வாழ்வு ஆணையாளராகவும், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தனமுனசிங்க பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய நிலையில்,சித்திரவதைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்று ITJP அமைப்பு தெரிவித்திருந்தது. இவர்களைத் தவிர, மேலதிகசொலிசிட்டர் ஜெனரல் யசந்த கோதாகொட இராணுவம் உள்ளிடட பாதுகாப்பு படையினருக்குஎதிராக சாட்சியமளிப்பதை தடுத்ததற்கான குற்றச்சாட்டுக்களை ITJP பகிரங்கப்படுத்தியிருந்தது.

இந்தநிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் UNCAT வினவியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்காது உதாசீனமாகஇருந்துவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சு செப்டெம்பர் பத்தாம்திகதி முதல் செப்டெம்பர் 28 ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள்மனித உரிமைகள் பேரவையின் 39 ஆவது கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய விடையங்கள்தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்வதற்கான அமர்வொன்றை நடத்தத்திட்டமிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க