கோட்டா சற்று முன்னர் மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில்!

16shares

ஸ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சற்று முன் ஆஜராகியுள்ளார்.

இவ்விடயம் குறித்து தெரியவருவதாவது, 2008 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே இன்று மீண்டும் குற்றப்புலநாய்வு திணைக்களத்தில் பிரசன்னமாகியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

மேலும் ஊடகவியலாளரும் த நேசன் பத்திரிகையின் இணை ஆசிரியருமான கீத் நொயர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த மாதம் 17ம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க