மைத்திரி கொலை முயற்சி; வீரவன்ச மனைவியை நாடுகிறது புலனாய்வு!

227shares

இலங்கை ஜனாதிபதி கொலை சதி முயற்சி தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியை சிஐடியினர் விசாரணைக்குட்படுத்தவுள்ளனர்.

ஜனாதிபதி கொலை சதி முயற்சியுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நபர் சசி வீரவன்சவை சந்தித்துள்ளமை சிஐடியினரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர், தான் விமல்வீரவன்சவின் வீட்டிற்கு சென்றதாக தெரிவித்துள்ளார்.

மேலம் விமல்வீரவன்சவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் தகவல்கள் வெளியானதை தொடர்ந்தே தான் அவரது வீட்டிற்கு சென்றதாகவும், அங்கு விமல்வீரவன்சவின் மனைவியை சந்தித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தவர்களின் உயிர்களிற்கு ஆபத்து உள்ளதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இந்தியர் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
`