முன்னாள் அமைச்சர் மீதான நிதி மோசடி வழக்கு ஒத்திவைப்பு!

11shares

இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தின் போது, விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான நிதிமோசடி வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக பெற்றுக்கொள்ளப்பட்ட 274 இலட்சம் ரூபாய் பணத்தைப் பயன்படுத்தி பொரளை - கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்ததாக மஹிந்தானந்த அளுத்கமகே மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஸ்ரீலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, எதிர்வரும் 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமை வகித்த இலங்கை சுதந்திர தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தின் பொருளாளராக செயற்பட்டிருந்த கஹவகே டக்ளஸிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
`