முன்னாள் எம்.பியின் மரணதண்டனை தீர்ப்பு மீண்டும் விசாரணைக்கு! பரபரப்பாகும் கொழும்பு!

92shares

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினாலேயே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பாரத லக்ஷமன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களும் உயர்நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையிலேயே, சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினாலேயே இந்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. துமிந்த சில்வா உள்ளிட்ட சாட்சியாளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க