சிவசேனை அமைப்பின் தலைவர் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு அழைப்பு!

20shares

சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம், பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நான்காம் குறுக்குத் தெருவிலுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவின் அலுவலகத்திற்கு நேற்று அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை நடாத்திய பின்னர், தன்னை விடுவித்ததாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் குறிப்பிட்டார். சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தத்தை விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு கடந்த மாதம் ஐந்தாம் திகதி பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும், தனக்கு உடல்நல குறைவால் கொழும்பிற்கு செல்ல முடியாத நிலைமை காணப்படுவதாக சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தம் கடிதம் மூலம் பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, சிவசேனை அமைப்பின் தலைவரிடம் நேற்றைய தினம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க