அட்மிரல் விஜேகுணரத்ன அச்சுறுத்திய விசாரணையை புறக்கோட்டை பொலிசாரிடமிருந்து நீக்குமாறு நீதமன்றம் உத்தரவு

47shares

ஸ்ரீலங்கா தலைநகர் கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேர் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில்வைக்கப்பட்டிருந்த முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பிரதானசாட்சியாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளை புறக்கோட்டை பொலிஸ்நிலையத்திலிருந்து மாற்றுமாற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

11 பேர் கடத்தல் வழக்கின் பிரதான சந்தேக நபருக்குதப்பிச்செல்ல உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில்வைக்கப்பட்டிருந்த அட்மிரல் விஜேகுணரத்னவிற்கு, 4 விதமான கடுமையானநிபந்தனைகளுடன் 10 இலட்சம் பெறுமதியானஇரண்டு சரீரப் பிணைகளில் செல்வதற்கான அனுமதியை வழங்கிய நிலையிலேயே கொழும்பு கோட்டைநீதிமன்றம் இந்த உத்தரவையும் விதித்திருக்கின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை பிரதேசங்களில் வைத்து 5 மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டுகாணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டைநீதவான் நீதிமன்றில் இடம்பெற்று வருகிறது.

விசாரணைகளின்படி ஸ்ரீலங்கா கடற்படையின் முன்னாள்பேச்சாளரான கமாண்டர் டி.கே.பி.தஸநாயக்க உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலும்வைக்கப்பட்டதோடு கமாண்டர் தஸநாயக்க அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த கடத்தலுடன் தொடர்புபட்ட கடற்படையின் புலனாய்வு அதிகாரியானலெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகியிருந்த நிலையில்இரகசிய பொலிஸாரினால் கடந்த ஓகஸ்ட் மாதம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் பிரதான சந்தேக நபரான சந்தன பிரசாத்ஹெட்டியாராச்சி வெளிநாட்டிற்குத் தப்பிச்செல்வதற்கு உதவியமை மற்றும் அதற்கானநிதியு உதவிகளை வழங்கியமை போன்ற குற்றச்சாட்டை எதிர்கொண்ட முப்படைகளின் பிரதானிஅட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இரகசிய பொலிஸாரின் விசாரணைக்கான அழைப்பை தொடர்ச்சியாகநிராகரித்துவந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் புதன்கிழமை 28 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில்முன்னிலையாகியிருந்தார்.

வழக்கின் முக்கிய சாட்சியாளரான கடற்படை அதிகாரியானலெபடினன் கமாண்டர் கலகமகே லக்சிறி மீது கடற்படை முகாமிலுள்ள உணவகத்தில் தாக்குதல்நடத்த முயற்சித்ததாக புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் பதியப்பட்ட முறைப்பாட்டிற்குஅமைய சாட்சியாளர்களுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் முப்படைப் பிரதானிகைது செய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வழக்கு இன்றைய தினம் மேலதிக நீதவான் ரங்க திஸாநாயக்கமுன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது கடற்படை அதிகாரி லெப்டினன்கமாண்டர் கலகமகே லக்சிறிக்கு முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னதாக்குதல் நடத்த முயற்சித்தமை தொடர்பில் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பரிசோதகர்வீரசூரிய அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

இந்த அறிக்கையில் ரவீந்திர விஜேகுணரத்ன சந்தேக நபராககுறிப்பிடப்படாமல், பிரதிவாதி என்றுகுறிப்பிடப்பட்டுள்ளமையும், அவருக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் குறிப்பிடப்படாமையும் தொடர்பாக நீதிபதிகேள்வி எழுப்பினார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் கடற்படை முகாமில் 13 பேரிடம் விசாரணைநடத்தியதாகவும் அதில் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு எதிராக ஆதாரங்கள்எதுவும் கிடைக்கவில்லை என்பதால் சந்தேக நபராக அடையாளம் காண முடியவில்லையெனவும்புறக்கோட்டை பொலிஸ் நிலைய பரிசோதகர் வீரசூரிய மன்றில் தெளிவுபடுத்தினார்.

இதற்கு அதிருப்தி வெளியிட்ட நீதவான் விசாரணைகளில்திருப்தி இல்லை எனவும் நடுநிலையாக செயற்படுமாறும் பொலிஸாரை கண்டித்தார்.

விசாரணை அறிக்கை தொடர்பாக மேலதிக தெளிவைப்பெறுவதற்காக புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை நீதிமன்றம் அழைத்தது.

மன்றில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிமுன்னிலையாகியதை தொடர்ந்து பொலிஸ் விசாரணைகளில் திருப்தியில் என தெரிவித்துகுறித்த வழக்கை மீளப் பெறுவதாகவும் தெரிவித்தார்.

சாட்சியாளரை அச்சுறுத்திய விவகாரம் தொடர்பான மேலதிகவிசாரணைகளை தகுந்த பிரிவுக்கு ஒப்படைப்பதற்கான தீர்மானத்தை எடுக்கும்படி மேல்மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு நீதவான் ரங்க திஸாநாயக்க உத்தரவிட்டார்..

இதேவேளை மன்றில் இன்றைய தினம் முன்னிலையாகியிருந்தகுற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் பிரிவின்பொறுப்பதிகாரியான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த டி சில்வா மற்றும் பொலிஸ் பரிசோதகர்திசேரா கமகே ஆகியோர் அட்மிரல் ரவீந்திரவிடம் நடத்திய வாக்குமூலப் பதிவு தொடர்பானஅறிக்கையை சமர்பித்தனர்.

இரண்டு தினங்கள் அவரிடம் விசாரணை நடத்தியதாகதெரிவித்த பொலிஸ் பரிசோதகர் திசேரா கமகே, விசாரணைகளுக்கு அட்மிரல் விஜேகுணரத்ன பூரண ஒத்துழைப்பை வழங்கியதாககுறிப்பிட்டார்.

நிஷாந்த டி சில்வா மீது தமிழீழ விடுதலைப்புலிகள் என்றகுற்றச்சாட்டை முன்வைத்திருந்த அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, வாக்குமூலம்பதிவுசெய்யச் சென்ற நிஷாந்த டி சில்வாவை கண்டவுடன் அவரின் தோளில் தட்டி நட்புபகிர்ந்ததாகவும், அதனூடாக முன்னையகுற்றச்சாட்டில் எந்தவிதமான உண்மையும் கிடையாது என்பதை அவரே ஒப்புக்கொண்டதாகவும்சுட்டிக்காட்டினார்.

இதனிடையே குறுக்கீடு செய்த கடத்தப்பட்டவர்களுக்காகமுன்னிலையாகிய சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, குற்றப் புலனாய்வுப் பிரிவு பக்கச்சார்பாக செயற்பட ஆரம்பிப்பதாக தெரிவித்தபோதிலும், அதனை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நிராகரித்தனர்.

இதனிடையே பதில் குறுக்கீடு செய்த அட்மிரல் விஜேகுணரத்னசார்பான ஜனாதிபதி சட்டத்தரணி அனோஜ் பிரேமரத்ன, சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன அரச சார்பற்றநிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவதாக குற்றஞ்சாட்டினார்.

இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த சட்டத்தரணி அச்சலாசெனவிரத்னவுக்கும், குற்றச்சாட்டைமுன்வைத்த சட்டத்தரணிக்கும் இடையே 15 நிமிடங்கள் வாக்குவாதம் இடம்பெற்றது.

வழக்கு சார்ந்த கருத்துக்களை முன்வைக்காது போலியானகுற்றச்சாட்டுக்களை முன்வைத்ததற்கும் நீதிமன்றத்தை அவமதிப்பு செய்ததற்கும்ஜனாதிபதி சட்டத்தரணி பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று சட்டத்தரணி அச்சலசெனவிரத்ன நீதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

நீதவானின் கண்டிப்புக்குப் பின்னர் ஜனாதிபதிசட்டத்தரணி அனோஜ் பிரேமரத்ன மன்னிப்பு கோரினார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அட்மிரல் ரவீந்திரவிஜேகுணரத்னவிற்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கைக்குகுற்றப் புலனாய்வு பிவினர் எந்தவொரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை.

அதேபோல பிரதான சாட்சியாளரை அச்சுறுத்திய முறைப்பாட்டில்அட்மிரல் விஜேகுணரத்ன மீது போதிய ஆதாரங்கள் திரட்டப்படாததினால் புறக்கோட்டைபொலிஸாரும் அதற்கு எதிர்ப்பு வெளியிடவில்லை.

இதனையடுத்து 10 லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில்செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

அதேவேளை, 4 விதமான கடுமையான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது.

இதன்படி பதவியை வைத்து கொண்டு சாட்சியாளர்களைஅச்சுறுத்த கூடாது, விசாரணைக்குஇடையூறு ஏற்படுத்த கூடாது, பிரதான சாட்சியாளர் கஹந்தகமகே லக்சிறிக்கு அழுத்தம் கொடுக்க கூடாது, மேலதிகவிசாரணைகளுக்கு இரகசிய பொலிஸார் அழைக்கும் போது முன்னிலையாக வெண்டும் ஆகியநிபந்தனைகள் விதிக்கப்படடன.

இந்த நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் மீண்டும் கைதுசெய்யப்படுவார் என்றும் நீதவான் ரங்க திஸாநாயக்க அறிவுறுத்தினார்.

இதனையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க