பள்ளிவாசல் துப்பாக்கிச் சூட்டை நேரடி ஒளிபரப்புச்செய்த கொலையாளி! பதறிப்போன உலகம்!!

4161shares

நியூசிலாந்து பள்ளிவாசலில் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 49 பேரைப் படுகொலை செய்த கொலையாளி, அந்தக் காட்சிகளை தனது முகப்புத்தகம் வாயிலாக நேரடி ஒளிபரப்புச் செய்துள்ளார்.

துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்கள், அழுகுரல்கள் மற்றும் கலங்க வைக்கும் காட்சிகள் அடங்கிய இந்தக் காணொளியை முகப்புத்தகம் சற்று நேரங்களில் உடனடியாக நீக்கியுள்ளது.

தனது காரில் இருந்து நிதானமாக இறங்கி, பாள்ளிவாசலுக்குள் நுழைந்து நிதானமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்வதாக அந்த காணொளி எடுக்கப்பட்டுள்ளமை உலகெங்கிலும் பார்த்தோரின் கண்களைக் கலங்க வைத்துள்ளது.

குறித்த காணொளியை இங்கு இணைப்பதை எமது செய்திப் பிரிவு தவிர்த்துக்கொள்கின்றது.

இதேவேளை, இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து உறவினர்கள் இறந்த தமது சொந்தங்களைத் தேடும் காணொளியும் வெளியாகி உள்ளது.

எவ்வாறாயினும் உலகில் நிகழ்ந்த மற்றுமொரு கொடூரமான பயங்கரவாத தாக்குதலாகவே இது பார்க்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க