வீதியில் நின்ற லொறியை தள்ளி சென்ற நபர் கையும் களவுமாக சீ.சீ.டிவி கணொளியில் சிக்கினார்!

30shares

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் மல்லியப்பு பகுதியில் நிறுத்தி வைக்கபட்ட சிறிய ரக லொறி வண்டியினை களவாடிய சந்தேக நபரை சீ.சீ.டிவி கணொளியின் உதவியுடன் 14.08.2019 புதன்கிழமை அட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றய தினம் காலை வேளையில் குறித்த பகுதிக்கு சென்ற சந்தேக நபர் வேன் வண்டியின் கதவினை திறக்க முற்பட்டபோது அது திறக்க முடியாமல் போனமைக்கு அமைய அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறி வண்டியினை தள்ளிகொண்டு போகும் காட்சி வீடு ஒன்றில் பொருத்தபட்டிருந்த சீ.சீ.டிவி கேமராவில் வதிவாகியிருந்தது.

இதேவேளை லொறியின் உரிமையாளரால் அட்டன் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபட்ட முறைபாட்டுக்கமைய சீ.சீ.டிவி கணொளியின் உதவியோடு விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் அட்டன் ரொத்தஸ் பகுதியில் மறைத்து வைக்கபட்ட லொறி வண்டியினை மீட்டதோடு ஸ்டெதன் பகுதியை சேர்ந்த 37 வயதுடைய சந்தேகநபரையும் கைது செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது. செய்யபட்ட சந்தேக நபர் நாளைய தினம் அட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

இதையும் தவறாமல் படிங்க