மட்டக்களப்பு மாநகர சபைக்கு கிடைக்கவிருக்கும் மா பெரும் அங்கீகாரம்!

17shares
Image

மட்டக்களப்பு மாநகர சபையினை 100 மடங்கு அபிவிருத்தி செய்வதற்கான 1000 நாள் அபிவிருத்தித் திட்ட முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபையை மாற்றும் இந்த 1000 நாள் வேலத்திட்டத்தில் கேபிள் கார், நவீன சந்தை, பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபையினை 100 மடங்கு அபிவிருத்தி செய்வதற்கான 1000 நாள் அபிவிருத்திட்ட முன்மொழிவு நிகழ்வு நேற்று மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த ஜப்பான் நாட்டு தூதுவர் கெனிச்சி சுகுனுமா தலமையிலான குழுவினருக்கு இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையில் முன்மாதிரியான மாநகர சபையாக மட்டக்களப்பு மாநகர சபையை மாற்றும் வகையிலான இந்த வேலைத்திட்டத்தில் 24திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கனவு, நம்பிக்கை, திட்டமிடல், விடாமுயற்சி, வெற்றி என்ற வகையில் தொடர் நடவடிக்கையாக அமையவுள்ள இந்த வேலைத்திட்டத்தின் அனைத்துவிதமான செயன்முறைகளும் இதன்போது ஜப்பான் நாட்டு தூதுவர் கெனிச்சி சுகுனுமா தலமையிலான குழுவினருக்கு விபரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் என்.மணிவண்ணன் பிரதி ஆணையாளர் எஸ்.தனஞ்சயன், ஆளுனரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது ஜப்பான் நாட்டு தூதுவர் கெனிச்சி சுகுனுமா மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவானால் கௌரவிக்கப்பட்டார்.

முன்மாதிரியான மாநகர சபையாக மட்டக்களப்பு மாநகர சபையை மாற்றும் இந்த 1000 நாள் வேலத்திட்டத்தில் கேபிள் கார், நவீன சந்தை, பொழுதுபோக்குப் பூங்காக்கள், சோலார் வாகனத் தரிப்பிடம், குடிநீர்த்திட்டம். வடிகாலமைப்பு, பொது நூலகம். கிரிக்கட் விளையாட்டரங்கு, பொது மண்டபம் என அனைத்து வகையான திட்டங்களும் உள்ளடங்கவுள்ளன.

மட்டக்களப்பு மாநகர சபையானது மிகவும் சிறப்பான வகையில் செயற்படும் வண்ணம் புதிய திட்டங்களை உருவாக்கி முன்னேற்றுதல் என்ற மாநகர சபையின் முதல்வர் தியாகராஜா சரவணபவனுடைய சிந்தனைக்கமைய இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க