சுவிஸ் நீதியமைச்சர் சிறிலங்காவுடன் ஒப்பந்தம்! தமிழர்கள் திருப்பியனுப்பப்படுவார்களா?

  • Prem
  • August 06, 2018
425shares

சுவிற்சலாந்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் புதிய ஒப்பந்தமொன்று இன்று கொழும்பில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. நான்கு நாள் பயணமாக சிறிலங்காவுக்கு சென்றுள்ள சுவிஸ் நீதியமைச்சர் சிமொனெத்தா சொமாருஹா குடியேற்ற ஒத்துழைப்பு தொடர்பான விடயம் உட்பட ஒப்பந்தங்களில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.

சுpறிலங்காவின் சார்பில் உள்நாட்டு அமைச்சர் செனிவிரட்ண பண்டார நாவின்ன இதில் கைச்சாத்திட்டுள்ளார். இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படமுன்னர் சுவிஸ் நீதியமைச்சர் சிறிலங்கா அரசதலைவர் மைத்திரிபால் சிறிசேனா மற்றும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு உட்பட்ட தரப்புக்களுடனும் சந்திப்புக்களை நடத்தியதாக தெரியவருகிறது.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டிலும் இவ்வாறான ஒரு ஒப்பந்தம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்தில் சுவிசில் சட்டப்படி வசிக்கமுடியாத இலங்கையர்களை திருப்பியனுப்பும் வழிவகைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.

இப்போது இரண்டுவருடங்களில் மீண்டும் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டிப்பதால் இதன் நோக்கமும் முதலாவது ஒப்பந்தத்தை தழுவிய இரண்டாம்பாகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இதனால் அகதி தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட தமிழர்களுக்கு அல்லது உறுதியற்ற வதிவிட அனுமதியற்றவர்களுக்கு பாதிப்புகள் ஏற்படலாமென ஊகிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க