பிரித்தானியாவில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்ட குருகுலராஜா

138shares

கிளிநொச்சி மாவட்டத்தில் வலயக்கல்வி பணிப்பாளரும், கானான் என்னும் தொண்டு அமைப்பின் தலைவரும், வட மாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சருமாகிய திரு. குருகுலராஜா அவர்களுக்கு, அவரது மண்ணிற்கான சேவையைப் பாராட்டி பிரித்தானியாவில் வதியும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் “மண்ணின் மைந்தன்” விருதினை வழங்கி பாராட்டி உள்ளனர்.

ஆசிரிய சேவையில் இணைந்து பின்னர் கிளிநொச்சி மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்றுள்ள இவர் இலங்கை தமிழரசுக்கட்சியில் இணைந்து அரசியல் ரீதியாகவும் மக்களுக்கான சேவையினை தொடர்கின்ற ஒருவராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கிளி மாவட்ட மக்கள் அமைப்புடன் கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து பயணித்துவரும் இவர் முள்ளிவாய்காலுக்குப் பின்னான காலத்தில் முடங்கிக்கிடந்த மக்களின் உடனடி உதவிகள் மற்றும் மீள்குடியேற்ற காலப்பகுதியில் தற்காலிக உதவிகள் மற்றும் கல்வி, மருத்துவம், பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களை Kilipeople UK charity அமைப்பு நடைமுறைப்படுத்தி வந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து இன்றுவரை கிளி மாவட்ட மக்கள் அமைப்புடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்டு வருகின்றார்.

கிளிநொச்சி பிரதேசத்தில் அவரது சேவையை பாராட்டி இவ்வருடத்திற்கான “மண்ணின் மைந்தன்” விருது அண்மையில் பிரித்தானியா வந்த வேளையில் இலண்டனில் வைத்து வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதையும் தவறாமல் படிங்க
திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

திருகோணமலை விரிவுரையாளரான எனது மனைவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளது; வன்னியூர் செந்தூரன்!

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

வன்னி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இப்படிச் செய்வார்கள் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தார்கள்

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!

யாழில் வெளிநாட்டு மாப்பிள்ளையின் கண் முன்னே இளம்பெண் எடுத்த விபரீத முடிவு; அதிர்ச்சியில் குடும்பத்தினர்!