போட்டி அபாரமானால்.. தீர்ப்புக்கு சவால்! அபாரமும் சவாலும் சுவிஸ் மேடையில்!!

  • Prem
  • December 05, 2018
37shares

ஐபிசி தமிழ் நடாத்தும் மாபெரும் கலை நிகழ்வான ‘ஐபிசி தமிழா சுவிற்சலாந்து “2018” ForumFribourg இல் இடம்பெறவுள்ள நிலையில் தாயகத்திலிருந்தும், இந்தியாவிலிருந்தும் ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் நடுவர்கள் பலரும் வந்து கலந்துகொள்ளவுள்ளனர்.

குறிப்பாக அன்று நடைபெறவுள்ள மாபெரும் இரண்டு போட்டிகளுக்கான இறுதிச்சுற்றுக்களில் ஒன்றான ‘தங்கத் தமிழ்க் குரல் இளையோர் இன் வெற்றியாளர்களைத் தெரிவு செய்வதற்காக கேரள மண்ணின் இசை மைந்தன் ‘வெற்றிக்கொடிகட்டு மலைகளை முட்டும் வரை முட்டு” பாடல் புகழ் ஸ்ரீ பாலக்காடு ஸ்ரீராம் வருகை தரவுள்ளார்.

மற்றைய சுற்றுக்களிலும் நடுவர்களில் ஒருவராக இருந்து இறுதிச்சுற்றுக்கான போட்டியாளர்கள் ஐவரைத் தெரிவு செய்துள்ளார். இந்தநிலையில் நிச்சயமாக இந்த குறிப்பிட்ட போட்டி மிகத் திறமையானவர்களை கொண்டிருப்பதால் வெற்றியாளரைத் தெரிவு செய்வது மிகவும் கடினமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க