புலம்பெயர் தமிழர்களின் பெருங்கலைக்கனவு! சுவிஸில் நனவாகும் தருணம் !!

  • Prem
  • December 06, 2018
40shares

புலம் பெயர் தமிழர்களின் பெருங் கலைக்கனவொன்று சுவிஸ் மண்ணில் நனவாகிறது. நாளை மறுதினம் எட்டாந் திகதி Forum Fribourg மண்டபத்தில் இடம்பெறவுள்ள ‘ஐபிசி தமிழா” நிகழ்வில் பெரும் போட்டிக்களங்கள் இரண்டிற்கானஇறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. அதில் ‘நாட்டியதாரகை’ எனும் பரத நாட்டியப் போட்டியில் வெற்றிபெறப்போகும் தாரகைக்கு ஒரு கிலோ தங்கக் கிரீடம் பரிசாக சூடப்பட காத்துள்ளது.

இந்த போட்டியில் நடுவர்களில் ஒருவராக கலந்து சிறப்பிக்கவுள்ள பிரான்ஸின் பிரபல நடன ஆசிரியர் ஸ்ரீ தயாளசிங்கம் அவர்கள் “இவர்கள் எங்கள் குழந்தைகள். இவர்களை உச்சத்தில் வைத்துப் பார்க்க வேண்டியது எங்களுடைய கடமையாகும்” எனப் பெருமிதம் வெளியிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க