சுவிஸில் புலம்பெயர் தமிழரது சாதனையின் இறுதி நிமிடங்கள்!!

1227shares

ஈழத் தமிழரின் பிரமாண்டத்தின் அடையாளமான 'IBC-தமிழா' நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுவிஸ் போரம் பிரைபூர்க் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

IBC- தமிழ் தொலைக்காட்சி நடாத்திய 'நாட்டிய தாரகை' என்கின்ற நடனக்கலைப் போட்டி மற்றும் 'தங்கத் தமிழ் குரல்' என்கின்ற பாடல் போட்டி. போன்றனவற்றின் இறுதிப் போட்டிகள், பல ஆயிரம் புலம்பெயர் மக்கள் முன்னிலையில் சுவிட்சலாந்து 'போரம் பிறைபூர்க்' மண்டபத்தில் நாளை நடைபெற இருக்கின்றன.

கனடா, ஐரோப்பா தேசங்களைச் சேர்ந்த புலம்பெயர் தமிழ் போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில் நடுவர்களாக இலங்கை, தென் இந்திய மற்றும் ஐரோப்பியப் பிரபல்யங்கள் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.

நாளை நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்விற்கான ஏற்பாடுகள் இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டிருக்கின்றது.

போரம் பிரைபூர்க் மண்டபத்தின் காட்சிகள் சில:

இதையும் தவறாமல் படிங்க