கடும் குளிரிலும் லண்டனில் நடைபெற்ற சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம்!

241shares

பிரித்தானியத் தலைநகர் இலண்டனில் இன்று சிறிலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் சிறிலங்காவின் சுதந்திர தினத்திற்கு எதிராக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் தோழமை இயக்கம் ஏற்பாடுசெய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு உட்பட பல தமிழ் அமைப்புக்கள் ஆதரவு வழங்கியிருந்தன.

இலண்டனில் தற்போது நிலவும் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாது, ஏராளமான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டு, இன்று யாருக்கான சுதந்திரம் என கேள்வி எழுப்பிய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த முறை நடைபெற்றது போன்று இம்முறை அசம்பாவிதன்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக லண்டன் பொலிசார் மிகவும் அவதானமாக பணியில் ஈடுபட்டிருந்ததை காண முடிந்தது.

இன்றைய ஆர்ப்பாட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டன.இலங்கை அரசின் உயர்ஸ்தனிகர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் அழைத்து வரப்பட்டு சுதந்திரதினம் கொண்டாடப்பட்டது. இலங்கை அரசின் அமைச்சர் மங்கள சமரவீர இந்த சுதந்திர தினத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க