வரதகுமார் காலமானார்!

  • Prem
  • March 14, 2019
40shares

தமிழ் தகவல் மையத்தின்(ரி.ஐ.சி) நிறுவனரும் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் தமிழ்செயற்பாட்டாளருமாக இருந்த வரதகுமார் அவர்கள்; நேற்று லண்டனில் உடல் நலக்குறைவால் காலமானார்.

ஆரம்ப நாட்களில் தமிழீழவிடுதலைப்போட்டக்களத்தில் இருந்த வரதகுமார் அவர்கள் பின்னாளில் பிரித்தானியாவை தளமாககொண்டு சமூகசேவகராக பணியாற்றிவந்தார். தாயகத்திலும் மக்கள் நலவாழ்வுத்திட்டங்களிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.

தமிழ்மக்கள் சார்ந்த பல செயற்பாடுகளை மேற்கொண்ட வரதகுமார் தமிழர்தாயகத்தின் மீதான சிங்களக்குடியேற்றங்கள் உட்பட தமிழ்மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை ஆவணப்படுத்தல் ஆதாரங்களுடன் அனைத்துலக அரங்கில் எடுத்துச்செல்லும் வகையில் செயலாற்றியவர்.

இதையும் தவறாமல் படிங்க