கனடாவில் துப்பாக்கியை காட்டிய மிரட்டிய இரண்டு தமிழ் இளைஞர்கள் அதிரடியாக கைது!

56shares

கனடா ரொறன்ரோ மத்திய பகுதியில் உள்ள துரித உணவகம் ஒன்றில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய இரண்டு தமிழ் இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குயின்வீதி மற்றும் ஸ்பெடினா அவனியூ பகுதியில் அமைந்துள்ள துரித உணவகத்தில் 34 வயது ஆண் ஒருவர் வரிசையில் காத்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இருவர் அந்த நபருடனும் வரிசையில் நின்ற மற்றொருவருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது வெளியே இருந்து வந்த இருவரில் ஒருவர் தனது மேற்சட்டையை உயர்த்தி மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி எச்சரித்துள்ளார்.

மோதல் தீவிரமடைந்தபோது ஒருவர் அடித்து நிலத்தில் வீழ்த்தப்பட்டார் எனவும் இருவர் துப்பாக்கிசூட்டுக்கு அஞ்சி அங்கிருந்து தப்பியோடினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை துரத்திச் சென்ற சந்தேகநபர்கள் தப்பியோடியோர்மீது துப்பாக்கியை நீட்டி அச்சுறுத்தியுள்ளனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அந்தப்பகுதி ஒழுங்கை ஒன்றினூடாக ஓடிக்கொண்டிருந்த சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன் இரண்டு கைத்துப்பாக்கிகளையும் மீட்டனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஒஷாவா பகுதியைச்சேர்ந்த ஜேய்சன் ஜெயகாந்தன்(வயது 27) மிசிசாகாவைச்சேர்ந்த ஜோன்சன் ஜெயகாந்தன் (வயது 26 )ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

இவர்களில் ஜேய்சன் ஜெயகாந்தன் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக ரொறன்ரோ பொலிஸாரால் ஆபத்தான நபராக அறிவிக்கப்பட்டு தேடப்பட்டுவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
loading...