கனடாவில் கொல்லப்பட்ட தர்ஷிகாவின் இறுதிநேர கதறல் நீதிமன்றில் ஒலிக்கவுள்ளது!

831shares

கனடாவில் தனது முன்னாள் கணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட தர்ஷிகா ஜெகநாதன் உயிரிழக்க முன்னர் அவசர தொலைபேசி இலக்கத்துக்கு ஏற்படுத்திய அழைப்பு மற்றும் அவரது இறுதிநேர கதறல் ஒலிப்பதிவு நீதிமன்றில் முக்கிய ஆதாரமாக முன்வைக்கப்படவுள்ளது.

தனது முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கம் தன்னை கத்தியுடன் துரத்தும்போது தர்ஷிகா ஜெகநாதன்,911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பு எடுத்திருந்தார்.எனினும் அவர் இணைப்பில் இருக்கும்போதே குத்திக் கொல்லப்பட்டார்.

கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் சொட்டச் சொட்ட கதறிக்கொண்டே அவர் ஓடியபோது அவரது கதறல் அவசர உதவி மையத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிர்போகும்வரை தர்ஷிகா எழுப்பிய மரணஓலம் நீதிமன்றில் சாட்சியமாக ஒலிக்க இருக்கிறது.

அத்துடன் எட்டுவயது குழந்தை ஒன்றும் அந்த கோர தாக்குதலை கண்ணால் பார்த்திருக்கிறது.

இதற்கிடையில் மனைவியைக் கொலைசெய்த முன்னாள் கணவனான சசிகரன் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார்.அப்போது சசிகரன் ஒருமுறை நீதிமன்றை சுற்றபார்வையிட்டபின்னர் தலையைக்குனிந்து கொண்டார்.

மீளவும் அவர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இரண்டாம்திகதி நீதிமன்றில் ஆஜர்செய்யப்படவுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

கட்டுநாயக்க மற்றும் மத்தள விமானநிலையங்கள் திறக்கப்படும் திகதி அறிவிப்பு

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

முகக்கவசம் அணிவது தொடர்பில் கொள்கையை மாற்றிய உலக சுகாதார ஸ்தாபனம்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்

அடிமேல் அடி.. நிலைகுலைந்த ட்ரம்ப்! அமெரிக்காவில் இராணுவப் புரட்சியா? முற்றியது மோதல்