சிறிலங்கா அல்ல - புலிகளே என்னை சமாதானத்தூதராக அழைத்தார்கள்- எரிக்சொல்ஹெம்!

197shares

விடுதலைப் புலிகளே இலங்கைக்கான சமாதான அனுசரணைப்பணியில் நோர்வே பங்கெடுக்கவேண்டுமென வலியுறுத்தியிருந்ததாக நோர்வேயின் முன்னாள் அரசியல்வாதியுமான எரிக்சொல்ஹெம் ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

எரிக்சொல்ஹெம் மற்றும் பிரான்ஸ் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் ச.வி கிருபாகரன் ஆகியோருடன் ஊடகர் நடேசன் நடத்திய நேர்காணல் நிகழ்வின் போது இந்தக்கருத்தை வெளியிட்டிருந்தார்.

இலங்கைக்கான சமாதான அனுசரணைப்பணியில் பிரான்ஸ் பங்கேற்க வேண்டுமென சிறிலங்காவின் அப்போதைய அரச தலைவர் சந்திரிகா விரும்பியபோதிலும்; இந்த அனுசரணை பணியில் நோர்வே பங்கெடுக்கவேண்டுமென விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதாகவும் அதனடிப்படையில் தான் நோர்வே இந்தப்பணியில் இறங்கியதாகவும் எரிக்சொல்ஹெம் குறிப்பிட்டுள்ளார்:

தமிழ் மொழிபெயர்ப்பு:

எமது ஐ.பி.சி தமிழின் சிறப்பான/ முக்கியமான கலந்துரையாடலுக்கு வருகை தந்த எரிக் சொல்கெய்ம் மற்றும் கிருபா அண்ணாவை வரவேற்கின்றோம்.

2000 ஆம் ஆண்டிலிருந்து எமக்கு பரிட்சயப்பட்டவரும் மற்றும் எமது தமிழ் மக்களாலும் அறியப்பட்டவர் தான் எரிக் சொல்கெய்ம்.

அவர் ஒரு அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் 2002 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா அரசுடன் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் மத்தியஸ்தராக மேற்கத்தேய நாடுகளாலும் இந்தியாவாலும் நியமிக்கப்பட்டவர்.

2005-2012 வரை நோர்வே அரசாங்கத்தில் அமைச்சராக கடமையாற்றியவர். 2005-2007 வரை சர்வதேச தொடர்பாடல் அமைச்சராகவும், 2007-2012 வரை சுற்றாடல் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராகவும், 2016-2018 வரை யு.என் சுற்று சூழல் மற்றும் வளங்களுக்கான சபையின் செயலாளர் நாயகமாகவும் செயற்பட்டார்.

தற்போது நோர்வே நாட்டின் வெளியுறவு அமைச்சின் ஆலோசகராகவும் உள்ளார். இன்று எம்முடன் இணைந்துள்ளார். அதற்கான காரணம் இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விவாதிப்பதற்கும், 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற சாமாதான பேச்சு வார்த்தை ஏன் தோல்வியுற்றது மற்றும் சர்வதேசத்தின் பார்வையில் தமிழர்களின் எதிர்காலம் எப்படியாக இருக்கின்றது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு.

நான் இந்த நிகழ்ச்சிக்கு எரிக் சொல்கெய்ம் மற்றும் கிருபாகரன் ஆகியோரை வரவேற்கின்றேன். இவர் தமிழர்களின் மனித உரிமை செயற்பாட்டாளர் மற்றும் தமிழருக்காக யு.என் மனித உரிமை சபையில் தொடர்ந்தும் குரல் கொடுப்பவராவார்.

எரிக் சொல்கெய்ம் அவர்களிடம் எனது கேள்வியைக் கேட்கின்றேன்.

கேள்வி- தமிழர்களால் நன்கு அறியப்பட்டவர் என்ற அடிப்படையில் தற்போதைய இலங்கை தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பதில்- என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததோடு, இலங்கையின் கடந்த மற்றும் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பிலும் கலந்துரையாடுவதற்கு அழைத்ததற்கு நன்றி.

தற்போதைய இலங்கையின் நிலமை மிகவும் கருமையானதாகும். ஆனால் தற்போது அமைதியான சூழல் நிலவுகின்றது. மிக முக்கியமானது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலவும் தமிழர்களின் அரசியல் உரிமைகள், பிரச்சினைகள் இன்று வரை தீர்க்கப்படவில்லை.

இன்னும் தமிழர்கள் வடக்கு கிழக்கில் சமஷ்டி உரிமையை கோரவில்லை. ஆகையால் அதை முன்னோக்கி நகர்த்துவது தேவையானது. தற்போது அரசாங்கம் அமைத்துள்ள ராஜபக்ஷ சகோதரர்கள் முற்றுமுழுதாக சிங்களவர்களின் வாக்கில் அரசமைத்தவர்கள்.

தமிழர்களோ முஸ்லிம்களோ அவர்களுக்கு வாக்குகளை வழங்கவில்லை. ஆகவே தற்போதைய அரசு தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முயலாது. தமிழர்கள் தாமாகவே முன்வந்து ஒன்றிணைந்து வன்முறையற்ற மகாத்மா காந்தியின் வழிமுறையில் வந்த அகிம்சை முறையிலும் முஸ்லிம் மற்றும் சிங்களவர்களை இணைத்து தமக்கான சமஸ்டியை பெறவேண்டும்.

இதனால் எல்லா சமூகத்திற்கும் சம வாய்ப்பையும் உரிமையையும் வழங்க வேண்டும்.

கேள்வி - நீங்கள் கூறினீர்கள் காந்தியின் அகிம்சா முறையிலான போராட்டத்தை தமிழர்கள் முன்னெடுக்க வேண்டும் என்று ஆனால், நீங்கள் நினைக்கின்றீர்களா இலங்கைக்கு இது பொருத்தமாக வருமென்று?

பதில் - தமிழர்கள் தமது உரிமைகளை இலகுவாகவும், உயிரிழப்பு இல்லாமல் பெறுவதற்கும் நிச்சயமாக அதிக வாய்ப்புக்கள் உள்ளன. LTTE வன்முறையை கையாண்டது அதனால் தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தியது.

அவர்களின் நடவடிக்கையால் தமிழ் மக்கள் அதிகளவான சிங்கள அரசியல்வாதிகளையும், இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்தேய நாடுகளின் எதிர்ப்பையும் சந்தித்தார்கள்.

ஆகையால் தமிழர்கள் அகிம்சா முறையில் மாபெரும் வெற்றியை பெறமுடியும். காந்தியின் அகிம்சா முறையானது வெறுமனே பாராளுமன்றத்திலிருந்து பேசுவது மாத்திரமல்ல. அவரின் அகிம்சா முறையானது உண்ணாவிரதம் இருத்தல் மற்றும் உப்பு சத்தியாகிரகம் போன்ற பல்வேறு முறைகளை கொண்டது.

இதனுடன் ஒப்பிடும் போது தமிழர்களின் உரிமைப் பிரச்சினையை அகிம்சை வழியில் நகர்த்துவது கடினம் போல் தெரியும் ஆனால், மறக்க வேண்டாம் காந்தி அவர்கள் அகிம்சைப் போராட்டத்தால் அந்த நேரத்தில் ஒரே உலக வல்லரசான பிரித்தானியாவையே வீழ்த்தியவர்.

கேள்வி - நீங்கள் காந்தியின் வழியில் தான் தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க முடியும் என்கின்றீர்கள் ஆனால் 33 வருடங்களுக்கு முன்னர் திலீபன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து விட்டார்கள். அதன் பின்னர் தான் தமிழர்கள் காந்தியின் வழியில் நம்பிக்கை இழந்த விட்டனர். ஆகவே நீங்கள் எவ்வாறு நம்புகின்றீர்கள் தமிழர்கள் அதே பாதையை பின்பற்ற வேண்டும் என்று?

பதில் - ஆம் மிகவும் இலகுவாக புரியும் 1970 மற்றும் 1980களில் இளைஞர்களின் போராட்டம் தோற்றதால் தான் பிரபாகரன் அவர்களும் ஏனைய இதர 5 அல்லது 6 இயக்கங்களும் உரிமைக்கான ஆயுத யுத்தத்தை தொடங்கினார்கள்.

இந்த முறையான ஒவ்வொரு நகர்விலும் நண்பர்களை விட எதிரியை சம்பாதித்தார்கள். இந்த அமைப்புக்களால் சிங்களவர்களையோ முஸ்லிம்களையோ ஒன்றிணைத்து போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. மிக முக்கியமாக சர்வதேசத்தின் ஆதரவை பெறமுடியாது.

தமிழர்களுக்கு நண்பர்களே தேவை அவர்களின் உரிமையை வெல்வதற்கு இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் வன்முறையிலான போராட்டத்தை ஆதரிக்காது.

தமிழர்கள் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள் மற்றும் ஒரு நாட்டின் அரசுடன் போராட்டத்தை முன்னெடுப்பவர்கள். சர்வதேசத்தின் உதவியின்றி வெற்றிபெற முடியாது. ஆகையால், அகிம்சை முறையிலான போராட்டமே தமிழர்களை வெற்றி நோக்கி நகர்த்தும்.

கேள்வி - கிருபா அவர்களிடம், தற்போதைய அரசு இலங்கையில் 20 ஆவது திருத்த சட்டத்தை கொண்டு வந்து 13 ஆவது சட்டத்தை அகற்றிவிட்டு ஒரு சர்வாதிகார ஆட்சியை நடத்தவுள்ள போது, எரிக் சொல்கெய்ம் கூறியது போல தமிழர்கள் சமஸ்டியை ஏற்பார்களா? முக்கியமாக தனிநாட்டு கோரிக்கையை கைவிட்டு சமஸ்டியை ஆதரிப்பார்களா?

பதில் - நன்றி நடேசன் மற்றும் சொல்கெய்ம். சொல்கெய்ம், நான் இங்கே கூறப்போகும் விடயம் எனது தனிப்பட்ட கருத்து மாத்திரமல்ல அதிகளவான தமிழ் மக்களின் கருத்தாகும். உங்களுக்கு இலங்கையைப் பற்றி நன்கு தெரியும். தமிழர்களுக்கு அகிம்சைப் போராட்டம் புதிதல்ல. எமது அகிம்சைப் போராட்டம் தோற்றதால் தான் ஆயுதப் போராட்டம் தோற்றம் பெற்றது. ஆம் படுகொலைகள் இரு பக்கத்திலும் நடந்தேறியது. உதாரணமாக ஜோசம் பரராஜசிங்கம், குமார் பொன்னம்பலம் மற்றும் பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள் இடம்பெற்றன. நாங்கள் இப்போது நவீன யுகத்தில் உள்ளளோம். நான் தமிழ் மக்களின் கருத்தை கூற வேண்டும்.

பல தமிழர்கள் கருதுகின்றார்கள் நோர்வே அரசு சமாதான தரகர்களாக பங்குபற்றாமல் இருந்திருந்தால் தமிழீழம் பிறந்திருக்கும் என்று நான் ஏற்றுக் கொள்கின்றேன். இந்தியா மற்றும் சர்வதேசமும் இணைந்த தான் LTTEயை அழித்தது.

சர்வதேசம் பல காரணங்களுக்காக பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டது. நீங்கள் டெய்லி மிரருக்கு வழங்கிய பேட்டியில் கூறினீர்கள் பிரபாகரன் தனது வாக்குறுதியை நிறைவேற்றினார் என்று. இதைப் பார்க்கும் போது ஒரு சமாதான அனுசரணையாளராக நோர்வே தோல்வியடைந்துள்ளது.

உதாரணமாக இலங்கை அரசு சமாதான பேச்சுக்களிலிருந்து வெளிநடப்பு செய்த போது ஒரு எதிர்ப்பும் நீங்கள் தெரிவிக்கவில்லை. ஐரோப்பிய யூனியன் LTTEயை தடை செய்த போதும் ஒரு நடவடிக்கை இல்லை. அதனால் LTTE தமது பலத்தை இழந்தார்கள்.

அதேபோல் தற்போதும் மனித பேரவலம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 11 வருடமாக தமிழருக்கு ஒரு முன்னேற்றமும் கிடைக்கவில்லை. வடக்கு கிழக்கு தமிழருக்கு சமாதானம் இல்லை ஆனால் சிங்களவருக்கு சமாதானம் இருக்கலாம். எனது கேள்வி நோர்வே மற்றும் சர்வதேசமும் தமிழர்களுக்கு என்ன செய்யப் போகின்றது. இந்த சமுகம் முள்ளிவாய்க்கால் பேரவலம் மற்றும் இன சுத்திகரிப்பையும் எதிர்கொண்டுள்ளது. ஆகவே நீங்கள் இதை இன அழிப்பு என்று கூறுவீர்களா?

கேள்வி - கிருபா அவர்களே உங்களிடம் இன்னுமொரு கேள்வி, சொல்கெய்ம் கூறினார் தமிழர்கள் ஏனைய சமூகத்துடன் சேர்ந்து தமது போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ஆனால் இலங்கைக்கு உள்ளேயோ வெளியேயோ தமிழர்களுக்கான போராட்டத்தில் எந்த நகர்வும் இல்லை ஆகவே, தமிழர்கள் எவ்வாறு தமது உரிமையை வென்றெடுக்கப்போகிறார்கள்?

பதில் - நடேசன், தமிழர்கள் ஏனைய சமூகத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவது ஒன்றும் புதிய விடயமல்ல. LTTE எத்தனையோ தடவைகள் முஸ்லிம் தலைவர்களை சந்தித்தார்கள். அதேபோல் பல்வேறு சிங்களத் தலைவர்களுடனும் சந்திப்பை நடத்தினார்கள்.

நாங்கள் இலங்கையின் வரலாற்றை சரியாகப் பார்த்தால் இடதுசாரி கொள்கையுடைய வாசுதேவ நாணயக்கார ஒரு காலத்தில் தமிழர்களின் உரிமைகளுக்காகவும், காணாமல்ப்போனோருக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அப்படி அல்ல தமிழர்கள் அனைத்து சமூகத்துடனும் வேலையாற்ற தயாராகத்தான் இருக்கின்றார்கள்.

உதாரணமாக தமிழர்கள் முஸ்லிம்களை கைவிடவில்லை ஆனால் முஸ்லிம் மக்கள் எம்மைக் கைவிட்டு சென்றிருக்கின்றார்கள். சொல்கெய்ம் இதைக் கருத்தில் கொண்டு எமக்கு உதவி செய்ய முன்வர வேண்டும்.

இந்தியாவும் மிகவும் இறுக்கமான நிலையை எதிர் கொள்கிறது. 13 ஆவது திருத்தம் தொடர்பில் பாரத பிரதமரும் மிகவும் இறுக்கமான நிலையை கையாண்டார். ஆனால் மஹிந்த 13 ஆவது திருத்தம் பற்றி எதுவும் கூறவில்லை. ஆகையால் சொல்கெய்ம் அவர்கள் இது தொடர்பாக குரல் கொடுப்பாரா?

கேள்வி - 2002 ஆம் ஆண்டு இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் சமாதன பேச்சுவார்த்தை தொடர்பில் இதய சுத்தியுடன் செயற்பட்டனரா?

பதில் - ஆம் 2002 மற்றும் 2003 இரு தரப்பினரும் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். ஏனெனில் இரு தரப்பிலும் எந்த உயிர் சேதமும் இடம்பெறவில்லை.

LTTE சமாதான பேச்சுவார்த்தையை தாம் யுத்த வெற்றியின் உச்சத்திலிருந்த போது தொடங்கினார்கள். முக்கியமாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்தை தோற்கடித்த வெற்றி, பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சமாதான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள்.

ஆகையால் LTTEயினர் இதய சுத்தியுடன் கலந்து கொண்டனர். அதேபோல் சந்திரிகா மற்றும் ரணிலும் இதய சுத்தியுடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். அதேபோல் தெற்கின் இரு முக்கிய தலைவர்கள் (சந்திரிகா, ரணில்), கட்சிகள் (UNP, SLFP) இடையே அதிகாரப் போட்டி வலுப்பெற்றது. இது நடைபெறாமல் இருந்திருந்தால் நாங்கள் நல்ல பெறுபேறைப் பெற்றிருக்கலாம்.

அதேபோல் சில கருத்துக்களை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேபோல் இலங்கை அரசு செய்த படுகொலையான ஜோசப்பரராஜ சிங்கம், என்.ஜி.ஓ ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், LTTE தளபதிகள் மற்றும் இதர படுகொலைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றும் LTTE செய்த படுகொலைக்கு ஈடாக

இலங்கை அரசு மேற்கொண்ட படுகொலைகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. மற்றும் LTTE செய்த படுகொலைக்கு ஈடாக செய்த படுகொலை எனவும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் தமிழர்கள் அரசு செய்த படுகொலைகளையையும், சிங்களவர் LTTE செய்த படுகொலைகளையும் ஒப்பீடு செய்வதும் நிலைமையை இன்னும் மோசமடையச் செய்தது.

சமாதான காலத்தில் நோர்வேக்கு எதிரான அத்தனை கருத்துக்களும் சிங்கள பேரினவாதிகளால் தொடுக்கப்பட்டவை. உதாரணமாக எங்களுக்கு எதிராக உருவ பொம்மை எரிப்பு, பதாதைகள் ஏந்தியமை மற்றும் உயிர் அச்சுறுத்தல் இருந்தது.

LTTE எங்கள் மீது மிகவும் நம்பிக்கையாகவும், சந்தோசமாகவும் இருந்தார்கள். உதாரணமாக நான் ஐரோப்பாவின் பல தலைநகர்களுக்கும் சென்று கூறியிருந்தேன் LTTEயை தடை செய்யதால் சமாதானப் பேச்சுவார்த்தை தடைப்படும் என்று. அதை நான் செய்தேன். பாலசிங்கம் மற்றும் பிரபாகரனின் கோரிக்கை அடிப்படையில் ஆனால் நான் பிரபாகரனிடம் சொன்னேன் நீங்கள் படுகொலைகளை செய்தால் தடை செய்வதைத் தடுக்க முடியாது.

ஆனா் ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் LTTEயை தடை செய்தது. இறுதியாக தடை செய்தது சுவீடன் இப்போதும் ஞாபகம் இருக்கின்றது அப்போதைய வெளிவிவகார அமைச்சர் என்னை அழைத்துக் கூறினார் LTTEயை தடைசெய்வது தவறு என்றாலும் அனைத்து சாடுகளும் தடைசெய்ததால் நாங்களும் தடை செய்ய வேண்டும். ஏனெனில் நாம் தனித்து செயற்பட முடியாது. இது ஏன் நிகழ்ந்தது என்றால், LTTEயின் அரசியல் படுகொலைகள். உதாரணமாக லக்ஸ்மன் கதிர்காமர். நாங்கள் எங்களால் முடிந்ததை செய்தோம் ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிங்கள மற்றும் தமிழ் பேரினவாதிகள் சிலர் எங்கள் மீத பழி சுமத்துகின்றார்கள்.

நாங்கள் இலங்கை அரசு மீதோ LTTE மீதோ எங்களது அதிகாரத்தை செலுத்த முடியாது ஏனெனில் நாங்கள் சமாதா அனுசரணையாளர்கள். இலங்கை அரசும் LTTEயும் தங்களுக்கு விரும்பியதையே செய்தது. எங்களை செவிமடுக்கவில்லை.

கேள்வி - நீங்கள் கூறினீர்கள் சந்திரிக்காவும் ரணிலும் இதய சுத்தியுடன் சமாதான பேச்சுவார்த்தையை அணுகினார்கள் என்று ஆனால் 2005 ஆம் ஆண்டு சந்திரிகா கொண்டு வந்த அவசரகால சட்டம் மற்றும் ரணில் அரசாங்கத்தை கலைத்தது காரணமாகத் தான் சமாதான உடன்படிக்கை குழம்பியது இது தொடர்பில் உங்கள் கருத்து?

பதில் - இது எப்போதும் நடைபெறுவது, ஒரு சமாதான பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் சமாதான அனுசரணையாளர் மீது பழியைப் போடுவது. எல்லா தீர்மானங்களும் இரு பகுதியாளர்களும் தான் மேற்கொண்டார்கள். நாங்கள் வெறும் அனுசரணையாளர்கள் மாத்திரமே.

நாங்கள் நல்ல ஆரோக்கியமான உறவை LTTEயுடனும் இலங்கை அரசுடனும் மற்றும் இந்தியாவுடனும் பேணி வந்தோம். மேல் கூறிய ஒருவரும் எம் மீது பழி சுமத்தவே இல்லை.

கேள்வி - நீங்கள் twitterஇல் பதிவு செய்திருந்தீர்கள் பிரபாகரன் தவறிழைத்து விட்டார் அதாவது, மக்களை அவர்களின் நிலப்பகுதியிலிருந்து வெளியேற தடுத்ததன் மூலமாகவே அந்த இனம் படுகொலையை சந்தித்திருக்கலாம் என்று நீங்கள் நம்புகின்றீர்களா LTTE ஆயுதத்தை கீழே வைத்திருந்தால் யுத்த முடிவு வேறுவிதமாக அமைந்திருக்கலாம் என்று?

பதில் - நிச்சயமாக இறந்த மக்கள் மற்றும் LTTE யின் தலைவர்கள் உயிருடன் இருந்திருப்பார்கள். மிக முக்கியமானது இலங்கை அரசின் யுத்த குற்றமாகும். உதாரணமாக தமிழ் மக்கள் தங்கியிருந்த தற்காலிக குடிசை, ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைகள் மீது குண்டு வீசியது.

2009 ஆம் ஆண்டு நாங்கள் பிரபாகரனிடம் கேட்டோம் நாங்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா ஒரு திட்ட வரைபுடன் வருகின்றோம் முக்கியமாக அங்கு அடைபட்டிருக்கும் தமிழ் மக்கள் மற்றும் போராளிகளை கடலூடாக இலங்கையின் தென்பகுதிக்கோ அல்லது வெளிநாட்டிற்கோ அழைத்துச் சென்று அவர்களின் அடையாளங்கள் உறுதிப்படுத்தப்பட்டு பாதுகாப்பும் வழங்கப்படும் என்று நாம் நினைத்தோம் பிரபாகரன் இதை ஏற்றுக் கொள்வார் என்று ஆனால் அவர் அதை நிராகரித்தார்.

தமிழர்கள் கொத்துக்கொத்தாக இறந்தார்கள் தலைமை அழிக்கப்பட்டது. இதில் இலங்கை இராணுவமும் இரசும் படுகொலைகளை செய்தது.

கேள்வி : கடைசி யுத்த நிறுத்த நடவடிக்கையும், சமாதான நடவடிக்கையும் ஸ்ரீலங்கா படைக்கும், விடுதலைப்புலிகளுக்குமிடையில் நடைபெற்றது.

இதைப்பற்றி கதைப்பதற்கு கிருபாகரனை இணைத்தேன். கிருபாகரன் அவர்களே இதை எவ்வாறு பார்க்கின்றீர்கள். அதாவது 2009ற்கு பின்னர் எவ்வாறு உணர்கிறீர்கள்.

நீங்கள் சென்னீர்கள் சர்வதேச அமைப்புக்களில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பில் ஒரு தீர்வு கிடைக்கும் என மக்கள் நம்புகின்றார்கள் என்று. ஆனால் இன்றும் ஒரு தெளிவான முடிவுக்கு அவர்களால் வரமுடியவில்லை ஏனென்றால் 2009 ஆம் ஆண்டு மனித உரிமைகள் மீறல், போர்க்குற்ற மீறல்கள் என ஏராளமானவை நடந்துள்ளன.

இன்னும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. மக்கள் இன்னும் நம்புகின்றார்கள் சர்வதேச அமைப்புக்கள் உதவும் 30 வருடத்திற்கு பிறகு எனறாலும் ஒரு தீர்வு வரும் என்று.

பதில் : நடேசன்- நாங்கள் இதை கதைப்பதற்கு முன்னர் ராஜபக்ஷ என்ன சொன்னார் என்று பார்ப்போம். ராஜபக்ஷ அரசாங்கம் 2 முக்கிய விடயங்களை சொன்னது. முதலாவதாக விடுதலைப்புலிகளை அகற்றிய பின்பு அதற்கு பிரதி உபகாரமாக 13 ஆசனங்கள் அல்ல 13+ தருவதாக, ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. இதைத் தான் நாங்கள் மக்களுக்கு சொன்னோம். அரசியல் தீர்வு தான் கிடைக்கும் 1946,1956,1966 எப்படி நடந்ததோ அதேபோல் திரும்பத் திரும்பத் சொல்லியும் ஒரு போதும் கிடைக்கவில்லை.

முதலில் சொன்னார்கள் விடுதலைப்புலிகளை அழித்த பின்னர் முடிவு வரும் என்று. 11 வருடங்கள் ஆகிவிட்டது. ராஜபக்ஷ அரசாங்கம் மிகவும் வலிமை வாய்ந்தது. அவர்கள் 2/3 பெரும்பான்மையுடன் இருக்கின்றார்கள். அவர்களுக்கு என்னவேணுமோ அவர்கள் செய்திருக்க முடியும். ஆனால் அவர்கள் செய்யவில்லை.

ரணில் மைத்திரி அரசாங்கத்தை எடுத்துக் கொண்டால் அவர்கள் தங்களைப் பாதுகாக்கும் அரசாங்கம். என்ன அவர்கள் செய்தார்கள் என்று பார்த்தால் ஒன்றுமில்லை. வலிமையும் போதாது தமிழ் எம்.பிக்கள் கூட பிழையான முடிவு எடுத்தார்கள்.

இனப்படுகொலையை எடுத்தால் முதலாவதாக கலாசார படுகொலை, முதலாவதாக யாழ்ப்பாண நூல்நிலையம், தேவாலயங்கள், பாடசாலைகள் எரித்து அழிக்கப்பட்டன. முள்ளிவாய்க்காலில் மோசமான படுகொலை அன்றிலிருந்து இன்று வரை எந்த அரசாங்கமும் தீர்வு தரவில்லை.

நோர்வேக்கு எல்லாம் தெரியும் யாரும் முன் வந்து தீர்வு தரவில்லை. சர்வதேச அமைப்பும் முன்வந்து செய்யவில்லை. இப்போது ஏன் அவர்கள் நல்லிணக்கதிற்கும் பொறுப்புக்கூறலுக்கும் வருகிறார்கள். இதன் பின் ஏதாவது வைத்துக் கதைக்கிறார்கள்.

இதில் சர்வதேச அமைப்பும் நோர்வேயும் சேர்ந்து முதலாவதாக அரிஸ்கெல்போமுக்கும் நன்றாகத் தெரியும். புலித்தேவன் வெள்ளைக்கொடி பிடிக்கும் முதல் அரிஸ்கெல்போம் தொடர்பு கொண்டு கதைத்தார். அவர் சொன்னார் காலம் கடந்து விட்டது உங்களை வந்து காப்பாற்ற. யார் இதில் முதன்மை வகிக்கின்றார்கள். முதலிலிருந்தே ஸ்ரீலங்காவுடன் போர் நிறுத்தம் செய்தே எதுவும் நடக்கவில்லை.

நான் இங்கு ஒன்று சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகள் காவல்துறை, வழக்கு மண்டபம், தீர்வு கூறல் என எல்லாவிதமான திறமைகளையும் வைத்திருந்தார்கள். அவர்களால் இலகுவாக எதையும் செய்திருக்க முடியும் ஆனால் அவர்கள் தங்களின் பணத்தை பாவிக்கவில்லை. அவ்வளவு திறமைகள் வைத்திருந்தும் இப்போது தமிழரின் இடம் பூச்சியத்தில் இருக்கின்றது.

இப்போது நாங்கள் தீர்வைப்பற்றி கதைக்கின்றோம். அவர்கள் வடக்கு கிழக்கைப் பற்றி கதைக்கவில்லை. வடக்கைப் பற்றி மட்டும் கதைக்கிறார்கள். வடக்கு என்பது வவுனியா முதல் மாங்குளம் வரை இதைப் பற்றி அவர்களுக்கு ஒன்றுமில்லை.

யாழ்ப்பாணத்தைப் பற்றி கதைக்கிறார்கள். மக்களுக்கு தெரியும் யார் பொய் சொல்கிறார்கள் என்று. விடுதலைப்புலிகள் அவ்வளவு பெரிய அரசாங்கம் வைத்திருந்தும் எப்படி நடத்தினார்கள்? எப்படி நடந்தது? இதற்கு என்ன தீர்வு?

இதேநேரம் வடக்கு கிழக்கு மக்களுக்காக ஒரு விடயம் செய்தார்கள். OMP (காணாமல் போனோருக்கான அமைப்பு) குழு அமைத்தது. இதை விட வேறு எதுவும் செய்யவில்லை.

எனது கேள்வியாக இதைக் கேட்கின்றேன்.

கேள்வி :விடுதலைப்புலிகள் அப்படி ஒரு அரசாங்கம் வைத்திருந்தும் இப்போது தமிழர் நிலை பூச்சியம். தமிழர் பழைய நிலையை அடைய அல்லது தமிழருக்கு வடக்கு கிழக்கு கிடைக்க என்ன செய்வீர்கள்? என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் - நான் நினைக்கின்றேன் மிகவும் முக்கியமான விடயம், தமிழ் மக்கள் மிகவும் அழுத்தமாக இலங்கை அரசைக் கேட்டால் அவர்கள் அதைத் தரவேண்டும்.

முதலாவது என்னுடைய அறிவுரை தமிழ் அமைப்புக்கள் நிறைய உதவி செய்கிறார்கள். இரண்டாவது தமிழ்த் தேசிய அமைப்பு உதவ வேண்டும். இலங்கையில் தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் கூட்டுச் சேர்ந்து உதவிகள் பெறவேண்டும். நீண்ட கால தீர்வு ஒன்று பெறவேண்டும்.

எனக்கு சர்வதேசம் இதில் பங்கு பற்றியதில் சண்டைகள் நடக்கக் கூடாது. என்னால் எல்லாத்தையும் கதைக்க முடியாது, என்னால் உதவ முடியும், எல்லோரும் கூட்டாக சேர்ந்து செய்தால் விரைவில் தீர்வு கிடைக்கும்.

கேள்வி : நீங்கள் சொன்னீர்கள் தாக்குதல் செய்யக் கூடாது என்று ஆனால் உங்களுக்கு தெரியும் முதலில் யார் தாக்குதல் செய்தார்கள் என்று. தமிழ் பேசும் மக்கள் சமாதான நடவடிக்கை, போர் நிறுத்த உடன்படிக்கை, சத்தியங்கள், வாக்குகள் என்பவற்றை உணர்கிறார்கள்.

முக்கியமாக 2009 ஆம் ஆண்டு கொலை, போர்க்குற்றங்களின் பின்னர் 11 வருடங்களில் எதுவும் நடக்கலில்லை. தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். இப்போது சோலைகேம் சொன்னார் எப்படி பிரபாகரனும் விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தத்திற்கு வந்தார்கள் என்று ஆனால், ஏன் சர்வதேச அமைப்பு, வெளிநாட்டு அமைப்பு, ஐரோப்பியன், யு.எஸ்.ஏ, இந்தியா, சீனா ஏன் போரை நிறுத்தவில்லை. ஸ்ரீலங்காவிற்கு ஏன் பொருளாதாரத் தடை கொண்டு வரவில்லை.

பதில் - 2006 ஆம் ஆண்டிலிருந்து எல்லா நாடுகளும் நினைத்தார்கள் விடுதலைப்புலிகளை அழித்தால் நல்லது என்று. ஸ்ரீலங்கா அரசாங்கம் மனவருத்தத்தை மற்ற நாடுகளிலிருந்து சம்பாதித்தது. விடுதலைப்புலிகளை கொலைகள் நிறைய செய்த படியால், இந்தியா அரசாங்கம் சொன்னது நாங்கள் போர்நிறுத்தத்திற்கும் சமாதானத்திற்கும் எதவுவோம் என்று, 2008 ஆம் ஆண்டிலிருந்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு உதவி செய்யதது.

இப்போது பிழையான தீர்வு என்றும் நாட்டினைப் பிரிக்கக் கூடாது என்றும் நினைக்கிறார்கள்.

கேள்வி -சர்வதேச அமைப்பும் இந்தியாவும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று சொன்னார்கள் ஆனால் 11 வருடம் ஆகியும் எதுவும் நடக்கவில்லை. ஏன் அவர்களால் தங்கள் வாக்கை காப்பாற்ற முடியவில்லை?

பதில் - நல்ல கேள்வி- ராஜபக்ஷ சொன்னார் தாங்கள் வென்றால் தீர்வு என்று ஆனால் தமிழ் மக்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. போருக்கு பின்பும் சர்வதேச அமைப்புக்களிடம் கேள்வி கேட்டோம். ஆனால் நீண்ட காலமாக தீர்வு கிடைக்கவில்லை.

நீங்கள் சொன்னீர்கள் விடுதலைப்புலிகளுக்கு தடை என்று. மக்களைக் கொன்றார்கள் என்பதால் சர்வதேச அமைப்பும் ஐரோப்பிய நாடும் மற்ற நாடுகளும் விடுதலைப்புலிகளை அழித்த பின்னர் தடை விதித்துள்ளார்கள் என.

ஏனென்றால் கடுமையான கெட்ட பெயர்கள், தேச விரோதிகளாக கருதுகின்றார்கள். ஏனென்றால் அந்த நேரம் அமெரிக்காவில் தேசவிரோதிகள் எல்லாம் நிறைந்த நேரம்.

அப்படியென்றால் உங்களைத் தெரிவு செய்தது விடுதலைப்புலிகள், நோர்வே நாடு இல்லை. விடுதலைப்புலிகள் என்னைத் தொடர்பு கொண்டார்கள். அப்போது நான் நோர்வேயில் அரசியலில் இருந்ததால் பரிஸில் ஒரு சந்திப்பும் நடைபெற்றது.

கேள்வி- நீங்கள் எவ்வாறு உதவி செய்வீர்கள் தமிழ் மக்களுக்கு?

தமிழ் மக்களுக்கு உதவி செய்ய வேண்டு என்னால் இயன்ற அளவு சர்வதேச அமைப்புக்களுக்கு விளக்கி உதவி செய்ய முடியும். தமிழ் அமைப்புக்களுக்கும் உதவுவேன். என்னால் இயன்ற அளவு உதவி செய்வேன்.

நன்றி

இதையும் தவறாமல் படிங்க
முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

முத்தையா முரளிதரனின் அறிவிப்பால் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ள விஜய் ரசிகர்கள்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

சாவகச்சேரி திருமண மண்டபத்திற்கு வைக்கப்பட்டது சீல்

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து

‘நன்றி, வணக்கம்’ என்றாலே எல்லாம் முடிந்துவிட்டது!’ -விஜய் சேதுபதி வெளியிட்ட கருத்து