யாழில் ராணுவம் சுற்றுலா மையங்களை அமைக்கும் உண்மையான நோக்கம் என்ன?

116shares

வடக்கிலும் கிழக்கிலும் தேசிய பாதுகாப்புக்காக இலங்கை இராணுவம் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்ககப்படும் பிரதேசங்கள் அனைத்தும், வணிக ஆதாயத்துக்காகவே கையகப்படுத்தியுள்ளதாக Human Rights Watch குற்றம் சுமத்தியுள்ளது.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தனது சமீபத்திய அறிக்கையில், உள்நாட்டுப் போரின் போது கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலப்பரப்பு உரித்தானவர்களுக்குக் கையளிக்கப்படவேண்டும் என்ற அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்ற போதிலும் இன்னமும் இராணுவத்தினர் வசமே உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பிற்காகவே இராணுவ ஆக்கிரமிப்பு முக்கியமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளமை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக 'ஏன் நாம் வீட்டுக்கு செல்ல முடியாது? இலங்கையில் இராணுவ ஆக்கிரமிப்பு நிலம் என்ற ஆங்கில அறிக்கை கூறுகிறது.

அபகரிக்கப்பட்ட நிலங்கள் சுற்றுலாவுக்காக அல்லது விவசாயத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதால் அதன் உண்மையான நோக்கமான வணிக ஆதாயத்தையே அது சுட்டிக் காட்டுகிறது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் குறைந்தது நான்கு தளங்கள் தேசிய பாதுகாப்புக்காக என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் அவை வணிக நோக்கங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் தங்களது நிலங்கள் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரால் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள குற்றச்சாட்டையும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் உறுதிப்படுத்தியுள்ளது.

வடக்கிலும் கிழக்கிலும், இராணுவம் பண்ணைகளை இயக்கிவருவதோடு, சாலையோர உணவுவிடுதிகளையும் நிறுவி, சுற்றுலா பயணிகளுக்கான நட்சத்திர விடுதிகளையும் இயக்கிவருவதாக தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட சமூகங்களின் காணிகளை கையகப்படுத்தி தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவம் லாப நோக்காக நடந்து கொள்வதான தொடரரும் இவ்வாறான செயற்பாடுகள், கரிசனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறிக்கயில் சுட்டிக்காட்ட்டப்பட்டுள்ளது.

ஜூன் 2017 மற்றும் ஆகஸ்ட் 2018 வரையிலான காலப்பகுதியில் நடத்தப்பட்ட 110 நேர்காணல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கைஇ ஆயுத மோதல்களின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட நில ஆக்கிரமிப்பு வழக்குகளை விவரிக்கிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள் என்பதை தெளிவாக அறியமுடிவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மூன்று முக்கிய இனக்குழுக்களான, தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களவர்கள் ஆகியோர் வடக்கிலும் கிழக்கிலும் உள்ள இராணுவ ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளபோதிலும் பெரும்பான்மையாக இது தமிழ் சமூகத்தையே பாதிக்கிறது. என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இனது 80 பக்க அறிக்கை முழுவதையும் பார்ப்பதற்கு இங்கே அழுத்துங்கள்.

இதையும் தவறாமல் படிங்க