மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன்???

30shares
Image

வடக்கு, கிழக்கு மாகாணத்திற்கு எதிர்வரும் மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான முதலமைச்சர்

வேட்பாளர்கள் யார் என்பதை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று கூடி தீர்மானித்த பின் அறிவிக்கும் என, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது வடக்கு மாகண முதலமைச்சராக உள்ள சீ.வி.விக்கினேஸ்வரனையே அடுத்த மாகாண சபைத்தேர்தலில்

முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகவும், விரைவில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அம் முடிவினை அறிவிக்கும் எனவும் தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி

வெளியிட்டிருந்த நிலையில், இது தொடர்பில் எமது செய்திச்சேவை எம்.ஏ.சுமந்திரனை தொடர்பு கொண்டபோது

கருத்துத் தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன்,

வடக்கு மகாணம், மற்றும் கிழக்கு மகாணத்திற்கான முதலமைச்சர் வேட்பாளர்கள்; தொடர்பில் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு தீர்க்கமான முடிவையும் எடுக்கவில்லை.

அப்படி கட்சியால் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பின் அது எனக்கும் தெரியப்படுத்தப்பட்டிருக்கும்.

அந்த ஊடகத்தால் வெளியிடப்பட்ட செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி.

திட்டமிட்டு கொழும்பு ஊடகம் ஒன்றினால் பரப்பப்படுகின்ற பொய்யான செய்தி என்றும் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டார்.

எனினும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பானது எதிர்வரும் மாகாண சபைத்தேர்தல் தொடர்பில் பல்வேறு சந்திப்புக்களை

மேற்கொண்டுவருவதாகவும், விரைவில் முதலமைச்சர் வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளவர்களின் பெயர்விபரங்கள்

உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் தவறாமல் படிங்க
வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

வல்லரசு நாடொன்றில் தமிழ் மொழிக்கு கிடைத்த முக்கிய இடம்; ஈழத்தமிழர்களினாலும்தான் இது சாத்தியம்!

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?

மூன்று மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம்; மாலை வரை சடலம் கடற்கரையில் கிடந்ததேன்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?

இரவோடு இரவாக கோவிலுக்குள் நடந்தேறிய கொடுமை! சூத்திரதாரிகள் யார்?