இலங்கை கடற்பரப்பில் தொன் கணக்கான எரிபொருள் கண்டு பிடிப்பு!

165shares

முத்துராஜவெல எரிபொருள் களஞ்சிய சாலைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தொன் கணக்கான பெற்றோல் கடலில் கலந்துள்ளது.

இவ் எரிபொருள் கசிவு தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து இலங்கைக்கு எரிபொருள் கொண்டு வரப்பட்ட கப்பலிலிருந்து அவ‍ை இறக்கப்படும் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் குழயில் கசிவு ஏற்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் உஷ்வெட்டகெய்யாவ முதல் பமுனுகம வரையான கடற்பிராந்தியங்களில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை மீனவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன் கடலில் கலந்துள்ள எண்ணெயை அகற்றும் வரை குறித்த கடற்பிராந்தியத்துக்கு வருகை தருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடலில் கலந்துள்ள எண்ணெயை அகற்றுவதற்காக 58 இராணுவ வீரர்களும் 300 கடற்படையினரும் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க