ஐரோப்பாவில் 3 ஆசியப்பெண்கள் கழுத்தறுத்து கொலை! தஞ்சம்கோரவந்த தமிழர்களா?

168shares

கிரேக்கநாட்டுக்கும்துருக்கிக்கும் இடையிலான எல்லைப்பகுதியில் கொடுரமாக கழுத்தறுபட்டும் பல கத்திக்குத்துக்காயங்களுடனும்ஆசிய இளம் பெண்கள் மூவரின் உடலங்கள் கண்டெடுக்கபட்டுள்ளன.

அகதித்தஞ்சம் கோருவதற்காகதுருக்கியில் இருந்து சட்டவிரோதமாக இவர்கள் எல்லை கடந்து சென்றதாக கருதப்படும் நிலையில்இவ்றோஸ் ஆற்றுக்கு அருகில் இந்த கொடுரம் இடம்பெற்றுள்ளது.

கொல்லப்பட்ட பெண்களில்ஒருவர் தங்க நகைகளை அணிந்திருப்பதால் இவர்கள் தமிழர்களா என்ற அச்சமும் எழுந்துள்ளது.ஆயினும் கொல்லப்பட்டவர்களின் ஆள் அடையாளங்களை உறுதிப்படுத்தும் எந்த ஒரு ஆவணங்களும்மீட்கப்படவில்லை. ஒரேயொ செல்பேசி மட்டம் அந்த இடத்தில் காணப்பட்டுள்ளது அவர்களின் முக அமைப்புகளைக் கொண்டு அவர்கள் அனைவரும்ஆசியப்பிராந்தியத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மட்டும் கிரேக்க காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம்இந்த உடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்று அவை அனைத்தும் உடற்கூற்று ஆய்வுகளுக்கு உட்படுத்தபட்டுள்ளன.உடலங்களின் கை கால்கள் கட்டப்பட்டிருந்ந்தாகவும் கூறப்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள்ஒரே குடும்பத்தைச்சேர்ந்த பெண்களா என்பது குறித்தும் ஏன் இவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்இவர்களின் கொலையுடன் ஆட்கடத்தல்காரர்களுக்கு தொடர்பு இருக்கின்றதா என்பது குறித்தும்தீவிரவிசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

கொல்லபட்ட மூவரும்30 வயதுக்கு உட்பட்ட பெண்கள் ஆனால் இவர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் அவர்களின் உடல்களில்இருப்பதால் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் இந்த கொலைகள் இடம்பெறவில்லையென காவற்துறை நம்புகிறது.

இதையும் தவறாமல் படிங்க