ஐரோப்பாவை முடக்கிய பனிப்பொழிவு ! ஜேர்மனியில் கடும்பாதிப்பு ஒஸ்ரியாவில் 7 பேர் பலி!

61shares

ஜேர்மனி ஒஸ்ரியா சுவிற்சலாந்து மற்றும் சுவிடனில் பல இடங்களில் இன்று கடுமையான பனிப்பொழிவு இடம்பெற்றுவருகிறது.

பனிப்பொழிவுகாரணமாக பல இடங்களில் இயல்பு வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் தென்பகுதியில் உள்ள பவாரியா மாகாணத்தில் தரைவழிபோக்குவரத்து முடங்கியதால் இன்று பல பாடசாலைகள் இயங்கவில்லை. பனிப்பொழிவு காரணமாக மரமொன்று முறிந்து விழுந்ததில் ஒன்பதுவயதுச் சிறுவனொருவன் பலியானான்.

கடந்தவாரம் முதல் கடும் பனிப்பொழிவு தொடர்ந்துவரும் ஓஸ்ரியாவில்; இதுவரை 7 பேர் பலியாகியுள்ளனர். சுவிடனின் வடபகுதியிலும் பனிப்பொழிவும் கடுமையான குளிர்காற்றும் வீசுவதால் பெரும் பாதிப்புக்கள் தொடர்கின்றன.

இதையும் தவறாமல் படிங்க