உயிரிழை அமைப்பின் புதிய கட்டடம் திறந்து வைப்பு!

40shares
Image

ஐ.பி.சி தமிழின் (உலகத்தமிழர்களுக்கோர் உறவுப்பாலம்) முழுமையான பங்களிப்போடு உயிரிழை அமைப்பின் உறுப்பினர்களுக்கான 20 அறைகளைக்கொண்ட கட்டடத்தொகுதி இன்றையதினம்(12-05-2018) சனிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மாங்குளத்தில் அமைந்துள்ள உயிரிழை அமைப்பின் உறுப்பினர்களுக்கான 20 அறைகளைக்கொண்ட கட்டடத்தொகுதியின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த வருடம் நவம்பா் மாதம் 05 ஆம் திகதி இடம்பெற்றது.

கட்டடத்தொகுதியின் வேலைகள் வெகு வேகமாக நடைபெற்ற நிலையில் இன்றையயதினம் திறப்பு விழா நிகழ்வு இடம்பெற்றது.

ஐ.பி.சி தமிழின் தலைவர் கந்தையா பாஸ்கரனின் முற்றுமுழுதான நிதிப்பங்களிப்புடன் அமைக்கப்பட்ட உயிரிழை அமைப்பின் கட்டடத்தொகுதி முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் பேராளிகளால் திறந்து வைக்கப்பட்டது.

உயிரிழை அமைப்பின் தலைவா் கோ.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் வைத்தியசாலை பணிப்பாளா் த.சத்தியமூா்த்தி,யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளநல வைத்திய நிபுனா் ச.சிவதாஸ், உட்பட பலா் கலந்துகொண்டனா்.

இதன்போது பெயா்ப்பலகை திரைநீக்கம் செய்யப்பட்டு கட்டடம் திறந்து வைக்கப்பட்டதுடன் கட்டட திறப்பு விழாவின் ஞாபகாா்த்தமாக மரக்கன்றும் நாட்டப்பட்டது.

அத்துடன் உயிரிழை அமைப்பின் உறுப்பினா்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

ஒலி வடிவில் கேட்க
00:00
இதையும் தவறாமல் படிங்க
ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

ஜெயலலிதாவுக்காக எரித்து கொல்லப்பட்ட 3 மாணவிகள் - ஓர் நினைவுப்பகிர்தல்.!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விடிந்தால் கல்யாணம்; மணமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!

இலங்கையில் திருமண பந்தத்தில் இணைந்த தம்பதிகளுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி!