பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற 21வது தமிழர் விளையாட்டு விழா

84shares

தமிழர் புனாழ்வாழ்வுக் கழகம் பிரான்ஸ், உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் இணைந்து நடாத்திய 21வது தமிழர் விளையாட்டு யூலை 8ம் நாளன்று இடம்பெற்றது.

தமிழர்களின் பாராம்பரிய கலை அணிவகுப்புக்களுடன் பிரென்சு அரசியல் பிரதிநிதிகள், தமிழ் சமூக அரசியல் பிரதிநிதிகள் நிகழ்வினை தொடக்கிவைத்தனர்.

தமிழர் விளையாட்டு விழா 2018 உதைபந்தாட்ட போட்டியில் 14 அணிகளும், சிறுவர்களுக்கான போட்டியில் 6 அணிகளும், 35 வயதுக்கு மேற்பட்ட பிரிவில் 5 அணிகளும், விழா அன்று நடைபெற்ற 5 பேர் கொண்ட போட்டியில் 8 அணிகளும், பங்குபற்றியிருந்தன. தனிநபர் போட்டிகளாக சிறந்த பந்து உதைப்பாளர், சிறந்த உதைபந்து தடுப்பாளர் போட்டிகளும் இடம்பெற்றது. கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் 19 அணிகள் பங்குபற்றியிருந்தன.

தாச்சிப்போட்டி, கயிறுழுத்தல் போட்டிகளில் பல அணிகளும், கலந்துகொண்டு பங்குபற்றி சிறப்பித்தனர். கரம், சதுரங்கம், சாக்கோட்டம், முட்டியுடைத்தல், கலையணைச் சண்டை, சங்கீதக் கதிரை, குறுந்தூர மரதன், குறிபார்த்துச் சுடுதல் மற்றும் ஜனரஞ்சகப் போட்டிகளுடன் சிறுவர் விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தன.

அரங்க நிகழ்வாக பாரிஸ் சுருதி இசைக்குழுவினர் வழங்கிய இசைநிகழ்ச்சி, பார்வையார்கள் பங்குபற்றிய நீங்களும் பாடலாம், நாடகம், நடனம் ஆகிய இடம்பெற்றிருந்தன.

வர்த்தக நிறுவனங்கள், வானொலிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், அரசியல்அமைப்புக்கள், சமூக நலன் பேணும் அமைப்புக்கள், தங்கள் வியாபார விளம்பர காட்சி அறைகளை நிறுவி மக்களுக்கான தமது பரப்புரையை முன்னெடுத்தனர்.

இவாண்டிற்கான உள்நுழைவுச் சீட்டு நல்வாய்பில் 2830 என்ற இலக்கம் குலுக்கல் மூலம் உந்துருளிக்கு தெரிவாகியிருந்தது.

தமிழினத்தின் பண்பாட்டு அடையாளங்களோடு ஒன்று படவும் ஓரு நாள் மகிழ்வாக இளைப்பாறவும், வறுமையில் வாழும் தாயக மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழர் விளையாட்டுவிழாவிற்கு இவ்வாண்டும், குடும்பம் குடும்பமாக இணைந்துகொண்ட எமது மக்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம். தன்னலன் கருதாத தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தொண்டர்கள் மற்றம் சமூகஆர்வலர்களின் அரிய சேவையினூடா முன்னெடுக்கப்பட்ட விழாவில் பெரியவர்கள், சிறுவர்கள், விருந்தினர்கள் உட்பட 5 000ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர் என தமிழர் புனர்வாழ்வுக்கழகம் - பிரான்ஸ் விடுத்துள்ள செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
`